குறும்செய்திகள்

யாழில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!

Two youths arrested with swords in Jaffna

ஆனைக்கோட்டை பகுதியில், ஆபத்தான ஆயுதங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை, முள்ளி என்ற இடத்தில் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா வாள், கோடாரி என்பன கைப்பற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Two youths arrested with swords in Jaffna

Related posts

தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!

Tharshi

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Apple Server Most Powerful rack optimized server

Tharshi

Leave a Comment