குறும்செய்திகள்

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

IAF Has Sacked One Employee for Refusing to Take COVID19 Vaccine

கொரோனாவுக்கு எதிராக இந்திய விமானப்படை அதிகாரிகள் 9 பேர் தடுப்பூசி போட மறுத்ததனால், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு விளக்கமளிக்க மறுத்த ஒரு அதிகாரி விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டார்.

விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கூறி யோகேந்திர குமார் என்ற அதிகாரி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஜே.தேசாய், ஏ.பி.தாக்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோதுதான், தடுப்பூசி போட மறுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்க மறுத்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங் வியாஸ் தெரிவித்தார். அதே நேரத்தில் அந்த அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங் வியாஸ் நீதிபதிகளிடம் கூறுகையில்..,

“இந்தியா முழுவதும் விமானப்படையினர் 9 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர். அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருவர் பதில் அளிக்கவில்லை. அந்த பொறுப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இந்நிலையில், யோகேந்திர குமார் வழக்கை பொறுத்தமட்டில், அவர் தடுப்பூசி போட விருப்பம் இல்லை என்று கூறுவதை பரிசீலிக்குமாறு விமானப்படைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

IAF Has Sacked One Employee for Refusing to Take COVID19 Vaccine

Related posts

திருகோணமலையில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் கைது..!

Tharshi

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

Tharshi

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது..!

Tharshi

Leave a Comment