குறும்செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிவாயு நிறுவனம்..!

New Gas Company of the Ceylon Petroleum Corporation

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த தினத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் LP எரிவாயு தேவையில் சுமார் 5% தை உற்பத்தி செய்யும் நிலையில் இந்த தயாரிப்புகளை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சமமாக வழங்குகிறது.

மின்சக்தி அமைச்சு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சபுகஸ்கந்த பிரதேசத்தில் நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு சமையல் எரிவாயு தேவையில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

New Gas Company of the Ceylon Petroleum Corporation

Related posts

தீரா கஷ்டங்களை தீர்க்கும் வெள்ளிக்கிழமை புன்னை பூ அம்பாள் வழிபாடு..!

Tharshi

பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வரும் ஆர்யா படம்..!

Tharshi

20-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment