குறும்செய்திகள்

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு..!

Pilot charged after landing helicopter in Canada Town

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

கனடா நாட்டின் டிஸ்டேல் என்ற நகரில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியது. மருத்துவ ஆம்புலன்ஸ் வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவசர மருத்துவ உதவிக்காக முன் அறிவிப்பின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கலாம் என கருதிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 34 வயதான ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பி அதனை வாங்குவதற்காக முன்னறிவிப்பின்றி ஹெலிகாப்டரை தரையிறக்கியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பைலட் திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Pilot charged after landing helicopter in Canada Town

Related posts

நேற்று உலக அளவில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 11 பதிப்பு..!

Tharshi

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது : இராணுவத் தளபதி..!

Tharshi

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று : புதிதாக 11,699 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment