குறும்செய்திகள்

14-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

14th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 14.2021

பிலவ வருடம், ஆடி 29, சனிக்கிழமை,
வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:23 வரை,
அதன்பின் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் காலை 8:09 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : கருட ஜெயந்தி, சஷ்டி விரதம், முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மேலதிகாரியிடம் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்
பரணி: பக்குவமாகப் பேசி நல்ல பெயர் சம்பாதித்துக் கொள்வீர்கள்.
கார்த்திகை 1: உறவினர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகளால் செலவு உண்டு.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: லாபம் கிட்டும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
ரோகிணி: குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உங்களை குறை சொல்லியவர்கள் இன்று பாராட்டுவர்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பிரிந்தவர்கள் உங்கள் முயற்சியால் வந்திணைவர்.
திருவாதிரை: குழப்பங்கள் தீரும். வரவேண்டிய பணம் வசூலாகும்.
புனர்பூசம் 1,2,3: எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில் வளம் உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: காலையில் வரும் செய்தி மகிழ்ச்சி தரும். பரபரப்பான நாள்.
பூசம்: அமைதி கூடும் நாள். பணியிடத்தில் நன்மை உண்டு.
ஆயில்யம்: சண்டை போட்டவர் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்.

சிம்மம் :

மகம்: வாழ்க்கைத்துணையின் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும்.
பூரம்: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் 1: முதியோர் நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சிக்கல்கள் விலகி சிறப்படையும் நாள். உற்சாகம் கூடும்.
அஸ்தம்: சுணக்கம் காட்டிய செயல்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.
சித்திரை 1,2: விட்டுப்போன வாய்ப்பு ஒன்று மீண்டும் வந்துசேரும்.

துலாம்:

சித்திரை 3,4: நட்பு வட்டத்தில் நல்லவர், தீயவரை அடையாளம் காண்பீர்கள்.
சுவாதி: வாழ்க்கைத்துணை வழியே பணவரவு இன்று உண்டு.
விசாகம் 1,2,3: பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நெருக்கமானவருடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டும்.
அனுஷம்: வழிபாட்டில் கூடுதல் ஈடுபாடு வரும். குடும்பம் விரிவடையும்.
கேட்டை: நினைத்த விஷயம் ஒன்றை முடிக்க நெருக்கமானவர்கள் உதவுவர்.

தனுசு:

மூலம்: சந்தோஷச் செய்தி வரும் நாள். இழுபறியான விஷயம் முடியும்.
பூராடம்: நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
உத்திராடம் 1: வாக்குவாதத்தைத் தவிர்ப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எந்த விஷயத்திலும் தாமதங்கள் இருக்கும். பொறுமை தேவை.
திருவோணம்: பேச்சால் நன்மை வரும். படபடப்பின்றி செயல்படுங்கள்.
அவிட்டம் 1,2: குடும்ப ஒற்றுமை உங்களால் மேம்படும். செல்வம் சேரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள்.
சதயம்: உங்களின் எண்ணம் நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சகபணியாளர்களுடன் கனிவாகப் பேசுவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: கடமை தவறாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உத்திரட்டாதி: தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்துசேரும்.
ரேவதி: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை இருக்காது.

14th August Today Raasi Palankal

Related posts

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

Tharshi

48 வது சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்னம் பதவிப்பிரமாணம்..!

Tharshi

குழந்தைகள் விரல் சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிக்கும் : ஆய்வில் தகவல்..!

Tharshi

Leave a Comment