குறும்செய்திகள்

3-வது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்கா அனுமதி..!

In the United States permission to put up the 3rd dose vaccination

அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, அத்தகைய நபர்களுக்கு பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளில் 3-வது டோஸ் போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர அனுமதி அளித்துள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

மற்றவர்களுக்கு 2 டோஸ்களிலேயே போதிய பாதுகாப்பு கிடைப்பதால், இன்னொரு டோஸ் தேவையில்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையர் (பொறுப்பு) ஜேட் உட்காக் தெரிவித்துள்ளார்.

In the United States permission to put up the 3rd dose vaccination

Related posts

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்..!

Tharshi

தடுப்பூசி முதல் டோஸ் போட்டு மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்..!

Tharshi

200 ஐ கடந்த கொரோனா மரணங்கள்..!

Tharshi

Leave a Comment