குறும்செய்திகள்

தகனம் செய்ய பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைத்திருந்த பேரன்..!

The grandson who kept the grandfathers body in the fridge

இறந்த தாத்தாவின் பிணத்தை தகனம் செய்ய பணம் இல்லாததால் பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் காம ரெட்டியை சேர்ந்தவர் பாலைய்யா (வயது 93). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது பேரன் நிகில் (20). பாலையாவின் மகன் மற்றும் மருமகள் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இதனால் பாலைய்யா தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரகாலாவுக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலைய்யா உடல்நலக் குறைவால் இறந்தார்.

பாலையாவின் உடலை தகனம் செய்ய நிகிலிடம் பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைத்து அடைத்தார். தனது நண்பர்களிடம் பண உதவி கேட்டார். நிகிலின் நண்பர்கள் யாரும் பண உதவி செய்யவில்லை.

தாத்தா இறந்து 3 நாட்கள் ஆகியும் பிணத்தை அடக்கம் செய்யாமல் பிரிட்ஜிலேயே வைத்திருந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்து ஏன் துர்நாற்றம் வீசுகிறது? என்று நிகிலிடம் கேட்டனர். அதற்கு வீட்டில் எலி இறந்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்தார்.

இந்நிலையில், நேற்று பரகாலா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிகில் தன்னுடைய தாத்தா பிணத்தை தகனம் செய்ய பணம் இல்லாததால் பிரிட்ஜில் அடைத்து வைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த பாலைய்யா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பொலிசார் வழக்கு பதிவு செய்து பாலையா உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The grandson who kept the grandfathers body in the fridge

Related posts

03-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

எரிபொருள் இன்மை : இன்றிரவு செயலிழக்கும் மின்னுற்பத்தி நிலையம்..!

Tharshi

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்..!

Tharshi

Leave a Comment