குறும்செய்திகள்

தெலுங்கு படத்தில் வில்லனாக மிரட்டும் விஜய்சேதுபதி..!

Vijay Sethupathi Villain for Telugu Movie

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்..,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவைப் போல் வில்லன் வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாதவனின் “விக்ரம் வேதா”, ரஜினிகாந்தின் “பேட்ட”, விஜய்யின் “மாஸ்டர்” ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் திறம்பட நடித்து அசத்தினார்.

இதில் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. தற்போது “விக்ரம்” படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே “உப்பென்னா” என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Villain for Telugu Movie

Related posts

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் உள்ளார் : ஐ.நா.சபை தகவல்..!

Tharshi

தங்க விலையில் சரிவு..!

Tharshi

யூரோ கோப்பை கால்பந்து போட்டி : 3-0 என துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி..!

Tharshi

Leave a Comment