குறும்செய்திகள்

17-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

17th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 17.2021

பிலவ வருடம், ஆவணி 1, செவ்வாய்க்கிழமை,
17.8.2021, வளர்பிறை, தசமிதிதி நள்ளிரவு 2:48 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, கேட்டை நட்சத்திரம் நள்ளிரவு 1:44 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : முருகன், துர்கை வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சகிப்புத் தன்மை தேவை. தடைகள் தாண்டி முன்னேறுவீர்கள்.
பரணி: யாரைப் பற்றியும் யாரிடமும் கேலி பேசி சிரமத்துக்குள்ளாக வேண்டாம்.
கார்த்திகை 1: கடினமாக உழைத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முயற்சியில் இருந்த தடை நீங்கும். நிதானமான வெற்றி உண்டு.
ரோகிணி: உங்களை வெறுத்தவர் வலிய வந்து உங்களின் உதவியை பெறுவார்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பால் உயர்வீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பிரிந்தவர் ஒன்றுசேர வாய்ப்புண்டு. உங்களின் செயல்திறன் கூடும்.
திருவாதிரை: பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சி செய்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு வர வேண்டிய புகழும், பாராட்டும் தாமதமாகக்கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: சிறு பிரச்னைகள் பெரியவர்களின் தலையீட்டால் தீரும்.
பூசம்: அதிகமாக உழைப்பீர்கள். முன்னேற்றத்திற்கான புதுப்பாதை தெரியும்.
ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும்.

சிம்மம் :

மகம்: தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கக்கூடும்.
பூரம்: பணியாளர்கள் நிதிப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள்
உத்திரம் 1: முயற்சிகளுக்கு முழுமையான பலன் எதிர்பார்க்காதீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கும்.
அஸ்தம்: வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.
சித்திரை 1,2: மகிழ்வான நாள். எதிலும் சற்று விலகி நிற்பது நல்லது.

துலாம்:

சித்திரை 3,4: தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
சுவாதி: பண வரவு சற்று தாமதமாகும். வாகனம் வாங்கும் எண்ணம் வரும்.
விசாகம் 1,2,3: புண்ணியச் செயல்களில் ஈடுபடுவதால் மன நிம்மதி மீளும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நண்பர்களால் சங்கடமும் பிறகு நன்மையும் உண்டாகும்.
அனுஷம்: பெரிய விஷயங்களை நன்கு யோசித்த பிறகே முடிவு எடுங்கள்
கேட்டை: சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன் தொல்லை பற்றி பயம் வேண்டாம்.

தனுசு:

மூலம்: எதையும் நிதானித்து செய்தால் நன்மை அடைவீர்கள்.
பூராடம்: பயம் விலகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக மாறும்.
உத்திராடம் 1: தன்னம்பிக்கை குறையாமல் இருந்தால் சாதனை நிகழும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டால் கவலை வேண்டாம்.
திருவோணம்: இளைய சகோதர, சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: பெரியோரின் தலையீடு சிரமத்திலிருந்து விடுபட வழிகாட்டும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
சதயம்: ஆரோக்கியத்தில் சிறிய தொல்லை ஏற்பட்டு இன்றே குணமாகும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: உங்களது நல்ல செயலை பிறர் விமர்சித்தால் கண்டு கொள்ளாதீர்கள்.
உத்திரட்டாதி: குழந்தைகளின் சிரமங்களை தீர்ப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: எதிர்கால நன்மை குறித்துச் செய்திருந்த முயற்சி பலனளிக்கும்.

17th August Today Raasi Palankal

Related posts

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு..!

Tharshi

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

Tharshi

Leave a Comment