குறும்செய்திகள்

2வது டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி – 120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது..!

2nd Test against England India win by 151 Runs

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 12 ஆம் திகதி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

வலுவான ஆரம்பத்தினைக் கொடுத்த ரோகித்-ராகுல் கூட்டணி 126 ரன்களை (43.4 ஓவர்) எட்டிய போது உடைந்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா (9 ரன், 23 பந்து) ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.

அடுத்த வந்த கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி தனது 6வது சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்திருந்தது. 127 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் களத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ராபின்சன் பந்துவீச்சில் கேஎல் ராகுல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 40 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் (49), சிப்லி (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன்பின் விளையாடிய ரூட் (48) மற்றும் பேர்ஸ்டோ (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் 45 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்திருந்தது.

3வது நாள் ஆட்டத்தின்போது பேர்ஸ்டோ அரை சதம் கடந்து (57) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் (23), மொயீன் அலி (27) ரன்களில் வெளியேறினர். கர்ரன் (0), ராபின்சன் (6), வுட் (5), ஆண்டர்சன் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

3வது நாளில் 128 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, 4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (5), ரோகித் (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து விளையாடிய புஜாரா (45), கோலி (20) ரன்கள் எடுத்து வெளியேறினர். அரைசதம் விளாசிய ரஹானே 61 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 3 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில், 4வது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 82 ஓவர்களுக்கு, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 154 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், லாட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் ரிஷப் பண்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 16 ரன்கள் எடுத்திருந்த இஷாந்த் ஷர்மா இங்கிலாந்து வீரர் ராபின்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய ஷமி அரைசதம் விளாசினார். இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் முகமது ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 271 ரன்கள் முன்னிலையில் இந்தியா உள்ளது. இதனை தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இன்னும் 60 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

இதில், கேப்டன் ரூட் (33), பட்லர் (25) மற்றும் மொயீன் அலி (13) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். உட் (0) ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதனால், 51.5 ஓவரில் இங்கிலாந்து 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2nd Test against England India win by 151 Runs

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் : 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய பெங்களூர் அணி..!

Tharshi

இலங்கையில் நான்காவது கொவிட் அலை ஆரம்பம்..!

Tharshi

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment