குறும்செய்திகள்

18-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

18th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 18.2021

பிலவ வருடம், ஆவணி 2, புதன்கிழமை,
வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 12:36 வரை,
அதன்பின் துவாதசி திதி, மூலம் நட்சத்திரம் நள்ளிரவு 12:19 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : ஏகாதசி விரதம், விஷ்ணு வழிபாடு, கரிநாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நன்மை ஏற்படும். பணவரவு இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: உறவினர் வருகையால் விரும்பத்தக்க சம்பவம் ஒன்று நிகழும்.
கார்த்திகை 1: பயணம் செல்ல வேண்டி வரலாம். செலவும் அதிகரிக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி வரலாம்.
ரோகிணி: கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. கலகலப்பான நாள்.
மிருகசீரிடம் 1,2: லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உடல் ஆரோக்கியம் மேம்படும். அமைதி காப்பது நல்லது.
திருவாதிரை: நண்பர்களால் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும்.
புனர்பூசம் 1,2,3:. செலவு அதிகரிக்கலாம். இளைஞர்கள் கூடுதல் நன்மை அடைவர்.

கடகம்:

புனர்பூசம் 4: தந்திரத்தால் பகையை முறியடிக்க முயல வேண்டாம்.
பூசம்: எதையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டாகும்.
ஆயில்யம்: முயற்சிகளில் ஓரளவே சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: வீண் குழப்பம் அகலும். விரும்பிய பொருள் கைகூடும்.
பூரம்: முயற்சிகள் வெற்றிப்பாதையில் செல்லும். நற்செய்தி ஒன்று வரும்.
உத்திரம் 1: மந்த கதியில் இருந்த தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நிம்மதிக்கும் வாழ்க்கை வசதிக்கும் குறைவு இருக்காது.
அஸ்தம்: முன்னேற்றத்திற்கான முயற்சிகளை இன்று எடுப்பது நல்லது.
சித்திரை 1,2: பணியிடத்தில் மரியாதை கூடும். கலகலப்பான நாள்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தினருடன் கோபமாக பேச வேண்டாம்.
சுவாதி: குடும்பச் செலவு சற்று கூடும். பெண்களுக்கு நன்மையான நாள்.
விசாகம் 1,2,3: எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்ப நலத்திற்காக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
அனுஷம்: சஞ்சலமடைவதை விட்டு விட்டு திட சிந்தனையுடன் செயல்படுங்கள்.
கேட்டை: துரிதமாக செயல்பட்டால் நினைத்ததை முடிக்க முடியும்.

தனுசு:

மூலம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமையுடன் சுறுசுறுப்பு கூடும்.
பூராடம்: சிறு வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்
உத்திராடம் 1: மனமகிழ்ச்சி உண்டாகும். குழப்பம் நீங்கித் தெளிவு ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: முயற்சியில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும்.
திருவோணம்: உங்களின் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
அவிட்டம் 1,2: குடும்ப விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: இன்று புதிய செயல்களை செய்ய திட்டமிடுவீர்கள்.
சதயம்: பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
பூரட்டாதி 1,2,3: அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவதற்குப் பாடுபட வேண்டும்.

மீனம்:

பூரட்டாதி 4: இது வரை இருந்த கவலை நீங்கித் தெளிவு உண்டாகும்.
உத்திரட்டாதி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிகப் பாடுபடுவீர்கள்.
ரேவதி: முயற்சிகள் வெற்றியை தர கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டி வரும்.

18th August Today Raasi Palankal

Related posts

புனே இரசாயன ஆலையில் தீ விபத்து : 18 பேர் பலி..!

Tharshi

31-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கறிவேப்பிலை ரச சூப் எவ்வாறு செய்யலாம்..!

Tharshi

Leave a Comment