குறும்செய்திகள்

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Varalakshmi Viratham who should observe

ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.

இருப்பினும், வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்கள் தெரிந்து கொண்டு, யார் யார் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொண்டு விரதத்தை மேற்கொண்டால் பூரண பலன்கள் கிடைக்கும்.

கன்னிப் பெண்கள் :

வரலட்சுமி விரதத்தை கன்னிப் பெண்களும், சுமங்கலி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம். ஏன் கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள் என்றால், ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மொத்த மகிழ்ச்சியே அவரின் கணவரிடம் இருந்து தான் கிடைக்கின்றது என்பதால், கன்னிப் பெண்கள், தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என இந்த விரதத்தை கன்னிப் பெண்கள் ஏற்கின்றனர்.

சுமங்கலி பெண்கள் :

சுமங்கலி பெண்கள் முக்கியமாக இந்த விரதம் இருப்பதற்கு காரணம் தன் கணவருக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என்பது முதல் வேண்டுதல். அதோடு கணவரின் வேலை, தொழில் சிறப்பாக நடக்க வேண்டும்.

அதன் மூலம் நல்ல முறையில் செல்வ வளம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீட்டில் மகா லட்சுமி தங்கி பரிபூரணமாக சுபிக்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சுமங்கலி பெண்கள் இருக்க வேண்டிய ஒரு விரதம்.

Varalakshmi Viratham who should observe

Related posts

57 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம் : வாணி ராணி நடிகரின் அதிரடி முடிவு..!

Tharshi

19-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

16-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment