குறும்செய்திகள்

26-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

26th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 26.2021

பிலவ வருடம், ஆவணி 10, வியாழக்கிழமை,
26.8.2021, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:59 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, ரேவதி நட்சத்திரம் நள்ளிரவு 12:51 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்.
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும்.
பரணி: கவுரவப் பொறுப்பு ஒன்று தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்
கார்த்திகை 1: மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: ஷேர், கமிஷன் வகைகளால் திடீர்ப் பணம் வரும்.
ரோகிணி: சகோதர உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: ஆடம்பரச் செலவுகள் குறையும். கலகலப்பான நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சேமிக்கத் தொடங்குவீர்கள். பயம் தீரும்.
திருவாதிரை: உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்
புனர்பூசம் 1,2,3: அநாவசியக் காரணங்களுக்காக ஆதங்கப்படுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: குழப்பம் மிகும். தொழில் சிறக்கும். பேராசைகள் வேண்டாம்.
பூசம்: உங்களின் தனித்திறமையால் பாராட்டு பெறுவீர்கள்.
ஆயில்யம்: பதவி, சம்பள உயர்வு பற்றி பதற்றம் வேண்டாம்.

சிம்மம் :

மகம்: முடிந்த வரை செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள்.
பூரம்: எந்த விஷயத்திலும் கவனமும் நிதானமும் தேவை.
உத்திரம் 1: தேவையற்ற, நியாயமற்ற வாக்குவாதம் வேண்டாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: திடீர் பணவரவு உண்டு. சொத்தை அடைவதில் அவசரம் வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சி இருக்கும்.
சித்திரை 1,2: நண்பர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. பயம் தீரும்.

துலாம்:

சித்திரை 3,4: பிரச்னையை திறம்பட சமாளிப்பீர்கள். நன்மை உண்டாகும்.
சுவாதி: கடந்த சில நாளாக இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும்.
விசாகம் 1,2,3: குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: தெய்வ வழிபாடு செய்து மனதில் அமைதி காண்பீர்கள்.
அனுஷம்: பணத்தட்டுப்பாடு சற்றே நீங்கும். சந்தோஷம் தலைகாட்டும்.
கேட்டை: சிறு சிறு பிரச்னைகள் நீங்கும். பணியில் கவனம் செல்லும்.

தனுசு:

மூலம்: வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணம் உண்டு.
பூராடம்: உங்களின் செயல், பேச்சால் பிரச்னை வராதபடி கவனம் தேவை.
உத்திராடம் 1: செயல்களில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குத்தர வேண்டாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டாம்.
திருவோணம்: உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. அமைதியான நாள்.
அவிட்டம் 1,2: லோன் அனுமதி கிடைக்கும். வெளியூர் செல்ல ஏற்பாடாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிறரின் தவறுக்கு நீங்கள் ஆளாகாதபடி கவனம் தேவை.
சதயம்: சேமிப்பு கைகொடுப்பதால் நிம்மதி ஏற்படும். தீய நட்பு வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: வீண் பேச்சு வேண்டாம். பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: மகிழ்ச்சியுடன் புதிய வீடு, மனை வாங்க வாய்ப்பு உண்டு.
உத்திரட்டாதி: திட்டமிட்ட விஷயங்களில் சிறு சிறு மாற்றங்கள் நடக்கும்.
ரேவதி: தகுதி அறிந்து நட்புக்கொள்வது எதிர்கால சிக்கலைக் குறைக்கும்.

26th August Today Raasi Palankal

Related posts

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்..!

Tharshi

நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா..!

Tharshi

மண்சரிவில் சிக்கிய நால்வரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!

Tharshi

Leave a Comment