குறும்செய்திகள்

27-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

27th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 27.2021

பிலவ வருடம், ஆவணி 11, வெள்ளிக்கிழமை, 27.8.2021,
தேய்பிறை, பஞ்சமிதிதி இரவு 8:17 வரை,
அதன்பின் சஷ்டி திதி, அசுவினி நட்சத்திரம் நள்ளிரவு 2:52 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : மகாலட்சுமி, குபேரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பெரிய லாபம் வராவிட்டாலும் நஷ்டம் ஏதும் இருக்காது.
பரணி: புதிய முதலீட்டைத் தவிர்ப்பது நலம். குதுாகலமான நாள்.
கார்த்திகை 1: பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அமைதியான நாள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணிச்சுமை இருந்தாலும், அதை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: சவால் ஒன்றைத் துணிச்சலுடன் சமாளித்து முன்னேறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: அதிர்ஷ்டம் ஏற்படக் கூடிய அருமையான நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: புதிய தொழில், வியாபாரத்தில் ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை: நீங்கள் கண்ட கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
புனர்பூசம் 1,2,3: ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயம் தீரும்.

கடகம்:

புனர்பூசம் 4: தடைகளை தகர்த்தெறிய வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள்.
பூசம்: புதிய துறையில் விஷயம் ஒன்றைக் கற்று உற்சாகம் அடைவீர்கள்.
ஆயில்யம்: பணிச்சுமை காரணமாகப் பொறுப்பை மற்றவரிடம் விடாதீர்கள்.

சிம்மம் :

மகம்: உங்கள் வேலையை விடாமுயற்சியோடு செய்து முடிப்பீர்கள்.
பூரம்: கல்வியில் மேன்மை அடையக் கூடிய நாள். மகிழ்ச்சி கூடும்.
உத்திரம் 1: பேச்சு, அலைச்சலை தவிர்த்தால் நன்மை உண்டாகும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: எந்த எதிர்மறை சிந்தனையிலும் ஈடுபடாமல் இருப்பது நலம்.
அஸ்தம்: அனைவரிடமும் சற்றுக் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
சித்திரை 1,2: சுபநிகழ்வு தள்ளிப்போவது பற்றி மனஅழுத்தம் வேண்டாம்.

துலாம்:

சித்திரை 3,4: உங்கள் பெருந்தன்மையினால் மதிப்பு, மரியாதை தேடி வரும்.
சுவாதி: புதிய பணி வாய்ப்பு தேடி வரும். முதலீடு லாபத்தை தரும்.
விசாகம் 1,2,3: சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: சிறிய அளவில் சுபச்செலவு ஒன்று செய்ய வேண்டிவரும்.
அனுஷம்: நல்ல காலம் பிறக்க, பொறுமையுடன் சற்றே காத்திருங்கள்.
கேட்டை: வீட்டிலும், வெளியிலும் நிம்மதி கூடும். சுறுசுறுப்பான நாள்.

தனுசு:

மூலம்: உங்களின் முயற்சியால் எண்ணங்கள் சிறப்பாக நிறைவேறும்.
பூராடம்: மனம் நிம்மதி அடையும். பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும்.
உத்திராடம் 1: மனதை அரித்துக்கொண்டிருந்த கவலைகளில் ஒன்று தீரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பதற்றத்தைத் தவிர்த்து நிதானமாக செயல்பட வேண்டும்.
திருவோணம்: பங்காளிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
அவிட்டம் 1,2: செலவு வரும் என்பதால் ஆடம்பர செலவைத் தவிர்க்கவும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: தொலைத்த பொருட்கள் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
சதயம்: குடும்பத்தில் இருந்த மன சங்கடமான சூழல் மாறும்.
பூரட்டாதி 1,2,3: திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் அமையும்.

மீனம்:

பூரட்டாதி 4: மகன், மகளுக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
உத்திரட்டாதி: நண்பர் ஒருவர் மூலம் வாழ்வில் முன்னேற்றம் வரும்.
ரேவதி: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதலாகும். வருமானத்தில் மாறுதல் இல்லை.

27th August Today Raasi Palankal

Related posts

09-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொரோனா தொற்றானது கொடிய நோய் அல்ல : எஸ்.பி.திசாநாயக்க..!

Tharshi

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment