குறும்செய்திகள்

29-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 29.2021

பிலவ வருடம், ஆவணி 13, ஞாயிற்றுக்கிழமை
தேய்பிறை, சப்தமி திதி இரவு 11:57 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குழந்தைகள் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும்.
பரணி: முன்பு ஏற்பட்டிருந்த வீண் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.
கார்த்திகை 1: எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். பொறுமை கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.
ரோகிணி: உற்சாகமான நாள். எதிர்பாராத சிறு தொகை ஒன்று வரும்.
மிருகசீரிடம் 1,2: பேச்சின் மூலம் வெற்றி கிடைக்கும். பரபரப்பு கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: திடீர் உடல்நலக்கோளாறு சரியாகி நிம்மதி தரும்.
திருவாதிரை: பணியிட சகாக்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: பணம் கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்கள் இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பூசம்: பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
ஆயில்யம்: குழந்தைகளால் நல்ல பலன் கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.

சிம்மம் :

மகம்: வாழ்வில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். பெண்கள் வெற்றி பெறுவீர்கள்.
பூரம்: உழைப்பின் மூலம் நன்மை பெறுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
உத்திரம் 1: உங்கள் செயல்கள் மற்றவர்களை திருப்தியடையச் செய்யும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பலவகையான யோசனைகளை கையாள வேண்டி வரும்.
அஸ்தம்: முயற்சியில் வெற்றி ஏற்படும். பணவரவு திருப்தி தரும்.
சித்திரை 1,2: விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: திறமை வெளிப்படும். பணியிடத்தில் சுறுசுறுப்பு கூடும்.
சுவாதி: யாரிடமும் அவசரப்பட்டுப் பேசாதிருப்பது நன்மையை தரும்
விசாகம் 1,2,3: தன்னம்பிக்கை அதிகரிப்பதால் புதிய முயற்சி வெல்லும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பத்தை மதிக்காதவர்கள் மீண்டும் மதிக்க ஆரம்பிப்பர்.
அனுஷம்: குழந்தைகளின் விருப்பம் ஒன்று தாமதத்துக்குப் பின் நிறைவேறும்.
கேட்டை: அரசாங்கம் தொடர்பான விஷயத்தில் சாதகமான போக்கு காணப்படும்.

தனுசு:

மூலம்: மனதிற்கு நெருக்கமானவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம்: பொறுப்பு கூடும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்
உத்திராடம் 1: நீங்கள் விரும்பாத நபரின் வருகை இருக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தொழில், பணி முன்னேற்றப் பாதையில் செல்லும்.
திருவோணம்: குடும்பத்தில் குதுாகலம் இருக்கும். பேச்சினால் நன்மை உண்டு.
அவிட்டம் 1,2: நண்பர்களுக்கு நன்மைகள் செய்து நெகிழச் செய்வீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: திடீர் அதிர்ஷ்டம் உண்டு. நன்மைகள் நிதானமாகவே இருக்கும்.
சதயம்: உங்களின் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சேமிப்பு கூடும்.
பூரட்டாதி 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். சோம்பலைத் தவிர்க்கவும்.

மீனம்:

பூரட்டாதி 4: தாயாருக்கு நன்மை செய்வீர்கள். பெரியோரின் ஆசி உண்டு.
உத்திரட்டாதி: லாபம், வருமானம் உறுதியாகவும் நிதானமாகவும் இருக்கும்.
ரேவதி: நண்பர்கள் அதிகரிப்பர். உங்களால் மற்றவர்கள் பயன் அடைவர்.

29th August Today Raasi Palankal

Related posts

23-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

காதல் தகராறு : பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை..!

Tharshi

மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கம்..!

Tharshi

Leave a Comment