குறும்செய்திகள்

பெண்களை தீவிரமாக தாக்கும் நரம்பியல் நோய்கள்..!

Neurological diseases affecting women

பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம்.

தூக்கமின்மையால் அவதிப்படுபர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில் உணவு உண்ணாத காரணத்தாலும் இந்த தலைவலி உண்டாகும்.

உணவு ஒவ்வாமையால் கூட ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.

டென்ஷன் தலைவலி

டென்ஷன் தலைவலி மனஅழுத்தம், சோர்வு காரணமாக ஏற்படுகிறது. 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த தலைவலி அதிகம் வருகிறது.

அதிக வேலை, மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. தொடர்ந்து திரையை பார்ப்பது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சோர்வு, மது அருந்துவது, சைனஸ், சளித்தொல்லை போதுமான அளவு தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுகிறது.

டென்ஷன் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவு ஓய்வுதான் அருமருந்து. டென்ஷன் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

வலிப்பு நோய்

தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது வலிப்பு நோய். இது மூளையில் ஏற்படும் அளவுக்கு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் தாக்கமாகும். தற்போது வலிப்பு நோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்வர்கள், மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்த பரிசோதனைகளோடு மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு நோயின் காரணத்தை அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

பக்கவாதம்

மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. முன் அறிகுறிகள் எதுமின்றி திடீரென ஏற்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என குறிப்பிடுகிறார்கள். ரத்த ஓட்டத்தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக்காரணம் கொழுப்பு படிவுகள் தான். ரத்தச் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக்காரணமாகும்.

மூளைக்கட்டி

மூளைக்கட்டி எந்த வயதிலும் யாருக்கும் வரலாம். இது ஏற்படுவதற்கான சரியான காரணத்தை மருத்துவர்களால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. தலை வலி, வலிப்பு, பார்வை குறைபாடு, வாந்தி, நடத்தை மற்றும் ஆளுமையில் ஏற்படும் திடீர் வித்தியாசங்கள், நடப்பதிலும், உடலை சமப்படுத்துவதிலும் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பேச்சில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மூளைக்கட்டியின் அறிகுறிகளாகும்.

Neurological diseases affecting women

Related posts

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Tharshi

உலகின் மிக நீண்ட கண் இமைகள் : சீன பெண் கின்னஸ் சாதனை..!

Tharshi

பெண்களுக்கு கைகொடுக்கும் பகுதிநேர தொழில்கள்..!

Tharshi

Leave a Comment