குறும்செய்திகள்

30-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

30th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 30.2021

பிலவ வருடம், ஆவணி 14, திங்கட்கிழமை,
தேய்பிறை, அஷ்டமிதி திதி நள்ளிரவு 1:57 வரை, அதன்பின் நவமி திதி,
கார்த்திகை நட்சத்திரம் காலை 7:48 வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : கிருஷ்ண ஜெயந்தி, தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
பரணி: பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். பொறுமை அதிகரிக்கும்.
கார்த்திகை 1: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: விடாமுயற்சி செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.
ரோகிணி: எடுத்து கொண்ட விஷயங்களை திறம்பட செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு திருப்தி அடைவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சாதகமான பலன் கிடைப்பதற்கு சற்று உழைப்பீர்கள்.
திருவாதிரை மனதில் தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.
புனர்பூசம் 1,2,3: முயற்சித்தவை சிறு தாமதத்துக்குப் பின் நல்ல முறையில் நடக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும்.
பூசம்: பெரியோரால் நன்மைகள் ஏற்படும். நன்றி உணர்ச்சி வெளிப்படும்.
ஆயில்யம்: பிரியமானவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். கவலை குறையும்.

சிம்மம் :

மகம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும்.
பூரம்: அரசு மூலம் நடக்க வேண்டிய விஷயத்தில் இருந்த தாமதம் நீங்கும்.
உத்திரம் 1: பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி:

உத்திரம் 2,3,4: உங்கள் மேல் மற்றவர்கள் கொண்ட மரியாதை உயரும்..
அஸ்தம்: திறமை வெளிப்படுவதால் செயல்களில் வெற்றி உண்டு.
சித்திரை 1,2: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். தைரியம் கூடும்.

துலாம்:

சித்திரை 3,4: மனதில் இருந்த வீண் படபடப்பு அகலும். முயற்சியில் வெல்வீர்கள்.
சுவாதி: எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள். கருணை அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: ஊக்கமுடன் உழைப்பீர்கள். பேச்சில் கடுமை வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: பேச்சின் இனிமை, சாதுாரியம் இவற்றால் வெல்வீர்கள்.
அனுஷம்: அமைதியாக இருப்பது நல்லது. தாயாரால் நன்மை உண்டு.
கேட்டை: கண்டிப்புடன் செயல்படுவீர்கள். எடுத்த வேலைகள் கைகூடும்.

தனுசு:

மூலம்: புண்ணியச் செயலில் நாட்டம் அதிகரிக்கும். படபடப்பு வேண்டாம்.
பூராடம்: தந்தையுடன் அனுசரித்து செல்லுங்கள். நீங்கள் சொல்வது பலிக்கும்.
உத்திராடம் 1: அமைதியாகச் செயல்படுவீர்கள். சிக்கனம் தேவை.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நிதானமான நன்மைகள் உண்டு. மனதில் பரபரப்பு கூடும்.
திருவோணம்: திடீரென்று வாகனம் வாங்குவீர்கள். கலையார்வம் கூடும்.
அவிட்டம் 1,2: உஷ்ணம் காரணமாக உடல் நலம் பாதிக்காமல் கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: வழக்கத்தைவிட கடினமாக பணியாற்ற வேண்டி வரும்.
சதயம்: வருமானத்தில் தாமதம் இருக்கலாம். வருத்தங்கள் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: முயற்சிகள் உடனடியாக பலன் தராமல் போகலாம்.

மீனம்:

பூரட்டாதி 4: கூடுதலாக உழைத்து நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
உத்திரட்டாதி: வீண் அலைச்சல் உண்டாகலாம். பொறுமை தேவை.
ரேவதி: எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும்.

30th August Today Raasi Palankal

Related posts

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

உலகின் மிக நீண்ட கண் இமைகள் : சீன பெண் கின்னஸ் சாதனை..!

Tharshi

04-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment