குறும்செய்திகள்

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 31.2021

பிலவ வருடம், ஆவணி 15, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, நவமி திதி நள்ளிரவு 3:52 வரை,
அதன்பின் தசமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். யோகம் கூடும்.
பரணி: வீண் செலவுகள் குறைந்து நிம்மதி வரும். உறவால் நன்மை உண்டு.
கார்த்திகை 1: பிறரால் ஏற்பட்ட மனக்கஷ்டம் அவர்களாலேயே நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குழந்தைகளின் செயல்களால் பெருமிதம் அதிகரிக்கும்.
ரோகிணி: திடீர் பயணம் உண்டு. வீடு, வாகனத்தால் வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்கு உற்சாகம் கூடும். நட்பு வட்டம் விரியும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: கடந்த கால இனிய அனுபவத்தைப் பகிர வாய்ப்பு வரும்.
திருவாதிரை: தேவையின்போது திடீர் உதவி கிட்டும். அன்பளிப்பு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களை அனுசரித்து சென்று பலன் பெறுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பிறர் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பூசம்: நெருங்கிய நண்பரிடம் திடீர் இடைவெளி வந்தால் கவலை வேண்டாம்.
ஆயில்யம்: குழந்தைகளின் அறிவுத்திறனை கண்டு மகிழ்வீர்கள்.

சிம்மம் :

மகம்: சந்தோஷம் பெருகும்படியான எதிர்பாராத செலவுகள் வரும்.
பூரம்: எடுத்த விஷயங்களில் சிறுசிறு தடை, தாமதம் ஏற்படும்.
உத்திரம் 1: சவால்கள், வாக்குவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: கவனம் சிதறாமல் கடமையில் கண்ணாயிருப்பீர்கள்.
அஸ்தம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும்.
சித்திரை 1,2: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பழைய நட்பு ஒன்று மறுபடியும் கிடைக்கும்.
சுவாதி: குடும்பத்தின் அடிப்படை வசதி மேம்படும். வருமானம் வரும்.
விசாகம் 1,2,3: வெளியூர், வெளிநாட்டில் உள்ள உறவினர் மகிழ்ச்சியை பகிர்வர்.

விருச்சிகம்:

விசாகம் 4: பிரார்த்தனை ஒன்றை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.
அனுஷம்: அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
கேட்டை: புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பிறரை வியக்க வைப்பீர்கள்.

தனுசு:

மூலம்: மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு பேசுவது நல்லது.
பூராடம்: குடும்பத்தில் சண்டை ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து வைப்பீர்கள்.
உத்திராடம் 1: சீரான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எந்த ஒரு விஷயமும் சற்று நிதானமாக நடக்கும்
திருவோணம்: எதிர்ப்பை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனதில் இருந்த தீய எண்ணம் அகலும். மந்த நிலை வேண்டாம்.
சதயம்: புதிய கலையை கற்கும் விருப்பம் கைகூடும். உழைப்பு கூடும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் வாக்குவாதங்கள் குறைய காரணமாக இருப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: பிரச்னை ஒன்று தீரும். மன உளைச்சல் நீங்கும்.
உத்திரட்டாதி: வேலை சம்மந்தமாக இருந்த அலைச்சல், அதிருப்தி நீங்கும்.
ரேவதி: சூழ்நிலையை அறிந்து விட்டுக் கொடுத்து பிரச்னையை தீர்ப்பீர்கள்.

31st August Today Raasi Palankal

Related posts

யாழ்.சாவகச்சேரியில் இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம்..!

Tharshi

தத்தெடுத்த மகனினால் கொல்லப்பட்ட தாய்..!

Tharshi

10-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment