குறும்செய்திகள்

02-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

2nd September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 02.2021

பிலவ வருடம், ஆவணி 17, வியாழக்கிழமை, 2.9.2021,
தேய்பிறை, ஏகாதசி திதி நாள் முழுவதும்,
திருவாதிரை நட்சத்திரம் மதியம் 2:57 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், மரண – அமிர்த யோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: விரைந்து செயல்பட்டு வெல்வீர்கள். சோர்வு நீங்கும்.
பரணி: புதியவர்களின் அறிமுகம் நல்ல திருப்பத்தைத் தரும்.
கார்த்திகை 1: அக்கம் பக்கத்தினரோடு ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியாளர்களை ஊக்கப்படுத்தி பணியை முடிப்பீர்கள்.
ரோகிணி: கடன் தொல்லையை ஈடுகட்டுவீர்கள். நிம்மதி மீளும்.
மிருகசீரிடம் 1,2: ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் மிகும். பயம் நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த கடன் உதவியை இன்று பெறுவீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் தோன்றும் பிரச்னையை எளிதாக சமாளிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வழிபாட்டிற்காக வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தது மாறும்
பூசம்: எதிர்பார்த்த பணவரவு கிடைக்க சற்று அதிகம் மெனக்கெடுவீர்கள்.
ஆயில்யம்: புதிய முயற்சியில் நிதானம் அவசியம். உறவினர் சந்திப்பு நிகழும்.

சிம்மம் :

மகம்: சுபச்செலவுகளை மனதாரச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரம்: பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவோடு நன்மை அடைவீர்கள்.
உத்திரம் 1: நண்பர்களின் உழைப்பில் உங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்கள் இடமாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு வரும்.
அஸ்தம்: திட்டமிட்ட விஷயம் சிறு தடங்கலுக்கு பின் சிறப்பாக நடக்கும்.
சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பாராத செலவு ஒன்று வந்தாலும் மன நிறைவு உண்டு.
சுவாதி: எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதற்கு அதிகம் முயற்சிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: அலைச்சலுக்குப் பின் நன்மை வரும். மனம் மகிழும்.

விருச்சிகம்:

விசாகம் 4: மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்து மறையும்.
அனுஷம்: சொத்து வாங்குவது பற்றி சிறிய தடைகள் இருக்கும்.
கேட்டை: வீண் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் பிரச்னை இல்லை.

தனுசு:

மூலம்: பேச்சிலும், செயலிலும் அதிக கவனம் தேவை.
பூராடம்: சிலருடைய தேவையற்ற போக்கு பற்றி மன வேதனை வேண்டாம்..
உத்திராடம் 1: நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் குழப்பம் தரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பொறுப்புடன் உழைப்பவர்கள் நல்ல திருப்பம் காண்பார்கள்.
திருவோணம்: பணிகளில் அக்கறை செலுத்தி நன்மை அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: பழி தரக்கூடிய நண்பர்களின் சேர்க்கை வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
சதயம்: குடும்பத்தில் பணவரவுகள் அதிகமாகும். மகிழ்ச்சி கூடும்.
பூரட்டாதி 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றி திட்டமிடும்போது பதற்றம் வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்பி திட்டமிடுவீர்கள்.
உத்திரட்டாதி: வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
ரேவதி: அலைச்சலும், பதற்றமும் இல்லாமல் எதையும் செய்யப்பாருங்கள்.

2nd September Today Raasi Palankal

Related posts

SpringFest One Fashion Show at the University of Michigan

Tharshi

மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை : விரைவில் அறிமுகம்..!

Tharshi

சீனாவில் திவாலாகும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்..!

Tharshi

2 comments

Leave a Comment