குறும்செய்திகள்

மேலும் இரு வாரங்களுக்கு முடக்கத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்..!

Request to extend the freeze for two weeks

இலங்கையில் அமுலில் உள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகேயின் ஆராய்ச்சியை மேற்கோளிட்டே அவர் இக் கருத்தினை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,

கொழும்பு மாவட்டத்திற்குள் 14% கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இந்த எண்ணிக்கை மக்கள் தொகையில் குறைந்தது 9 மடங்கு அதிகம் என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது.

டெல்டா மாறுபாடு அதிகரித்து வருவதால், எத்தனை நோயாளிகள் இருக்கலாம் என்பதை கணிக்க முடியாது.

இவ்வாறு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி நீக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Request to extend the freeze for two weeks

Related posts

வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு..!

Tharshi

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு : தசுன் ஷானகவிடம் விசாரணை..!

Tharshi

Leave a Comment