குறும்செய்திகள்

04-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

4th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 04.2021

பிலவ வருடம், ஆவணி 19, சனிக்கிழமை,
4.9.2021, தேய்பிறை, துவாதசி திதி காலை 7:42 வரை,
அதன்பின் திரயோதசி திதி, பூசம் நட்சத்திரம் மாலை 6:00 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்.
பொது : மகா பிரதோஷம், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வேலைப்பளு அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
பரணி: பல நாட்கள் சந்திக்காத நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பை புன்னகையுடன் சமாளிப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பாதியில் நின்ற வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.
ரோகிணி: குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை புன்னகையுடன் சமாளிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பயம் தீரும். பெண்களால் நிம்மதி ஏற்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும்.
திருவாதிரை: உறவினர் உங்கள் ஆலோசனையை கேட்டுப் பயன் பெறுவர்.
புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகள் நீங்கி உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.

கடகம்:

புனர்பூசம் 4: கவலை ஒன்று முடிவுக்கு வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூசம்: பணியிடத்தில் உயரதிகாரி உங்களை ஆதரிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
ஆயில்யம்: நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மம் :

மகம்: இனிமையான நாள். எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.
பூரம்: சுபநிகழ்ச்சிக்கான முயற்சி வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.
உத்திரம் 1: இழந்த பொருட்கள் கிடைக்கும். சகோதர ஒற்றுமை உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: புதிய முயற்சி எடுக்கும் நாள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் உண்டு.
அஸ்தம்: உடன்பிறப்புகள் பற்றி ஏற்பட்ட கவலைகள் அனைத்தும் மாறும்
சித்திரை 1,2: வாழ்வில் திசைதிருப்பம் ஏற்படும். சுபச்செய்தி ஒன்று வரும்.

துலாம்:

சித்திரை 3,4: நீண்ட நாளைய கனவு ஒன்று நனவாகும் நாள்.
சுவாதி: சொத்துக்கள் வாங்குவது பற்றிய திட்டத்தில் தாமதம் ஏற்படலாம்.
விசாகம் 1,2,3: கவனத்துடன் புதிய திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணியிட விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
அனுஷம்: நெருங்கிய நண்பருடன் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
கேட்டை: எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தனுசு:

மூலம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் குறையும்.
பூராடம்: எதிர்பார்த்த விஷயம் ஒன்றிற்கு அதிகம் செலவாகலாம்.
உத்திராடம் 1: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: யாரிடமும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.
திருவோணம்: பணத்தை கவனமாக கையாளுங்கள். மனதிடம் தேவை.
அவிட்டம் 1,2: பிள்ளைகளிடம் இருந்து மனநிறைவு அளிக்கும் செய்தி வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: தாழ்வு மனப்பான்மை வராமல் காத்துக் கொள்ளுங்கள்.
சதயம்: எதிலும் நிதானப்போக்கு இருக்கும். பதற்றம் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஒருவர் திருமணம் குறித்து முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
உத்திரட்டாதி: மன நிறைவு ஏற்படும். சகபணியாளர்களின் அன்பு கிடைக்கும்.
ரேவதி: குறுக்கு வழி காட்டும் நண்பர்களை விலக்குவது நல்லது.

4th September Today Raasi Palankal

Related posts

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Tharshi

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை : அதிர்ச்சியில் மனைவி..!

Tharshi

Leave a Comment