குறும்செய்திகள்

06-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

6th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 06.2021

பிலவ வருடம், ஆவணி 21, திங்கட்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 7:48 வரை,
அதன்பின் அமாவாசை திதி, மகம் நட்சத்திரம் இரவு 7:06 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : அமாவாசை, முன்னோர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நல்ல செய்தி தேடி வரும். பொறுமை கூடுவதால் சாதிப்பீர்கள்.
பரணி: மற்றவர்களிடம் பணிவாகப் பேசி நன்மை பெறுவீர்கள்.
கார்த்திகை 1: முன்னேற்றத்திற்கு எடுத்த முயற்சி ஓரளவுதான் வெற்றி பெறும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: புதிய விஷயம் ஒன்றை கற்று அதைச் செயல்படுத்துவீர்கள்.
ரோகிணி: பணவரவு தாமதமாகிப் பிறகு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: முந்தைய கவலைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மற்றவர்களின் பாராட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை: கொடுத்த பொருள் பத்திரமாகத் திரும்பக் கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டிய நாள்.
பூசம்: நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருந்தாதீர்கள்.
ஆயில்யம்: ஆடம்பர செலவுகளால் சிறிதளவு பண நெருக்கடி உண்டாகும்.

சிம்மம் :

மகம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.
பூரம்: அலுவலகத்தில் வளைந்து கொடுத்து சென்று வெல்வீர்கள்.
உத்திரம் 1: குழந்தைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுவீகள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சி நிறைவேறுவதில் சற்று மந்தநிலை ஏற்படும்.
அஸ்தம்: சமீபமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை மாறி நிம்மதி வரும்.
சித்திரை 1,2: ஒருசிலருக்கு இடமாற்றம் மகிழ்ச்சியையும், லாபத்தையும் தரும்.

துலாம்:

சித்திரை 3,4: திட்டமிட்ட விஷயம் திசை மாறிச்சென்றாலும் நல்ல பலன் உண்டு.
சுவாதி: கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வெல்வீர்கள்.
விசாகம் 1,2,3: பணியிட எதிரிகள் மனம் மாறி நண்பர்களாவர்.

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்கால வாழ்வுக்கு உதவும் திட்டம் ஒன்று நிறைவேறும்.
அனுஷம்: செய்ய நினைத்த செயல் ஒன்றை நல்லபடியாக முடிப்பீர்கள்.
கேட்டை: நேற்றைய பிரச்னை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு:

மூலம்: குழந்தைகளால் பெருமை சேரும். பேச்சில் நிதானம் இருக்கும்.
பூராடம்: தள்ளிப்போட்ட வேலைகளை விரைந்து முடிக்க முயலுங்கள்.
உத்திராடம் 1: உங்களின் திட்டத்திற்குப் பணியிடத்தில் வரவேற்பு அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வெற்றி வாய்ப்புக் கூடும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லவும்.
திருவோணம்: கடன்களை முடிப்பதில் சுணக்கம் வேண்டாம்.
அவிட்டம் 1,2: பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: நண்பர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்.
சதயம்: பெரியோருக்கு உதவி செய்து அவர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

மீனம்:

பூரட்டாதி 4: மகிழ்சி தரும் செலவு என்றாலும் கட்டுப்படுத்தப் பாருங்கள்.
உத்திரட்டாதி: தன்னம்பிக்கை இழக்க செய்பவரிடமிருந்து விலகுங்கள்.
ரேவதி: உங்களின் பணிக்கு பாராட்டு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

6th September Today Raasi Palankal

Related posts

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Tharshi

எல்லாத்தையும் மூட வைச்ச கொரோனாவுக்கு இந்த மனைவிமாரோட வாயை மட்டும் மூட வைக்க முடியல..!

Tharshi

25-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment