குறும்செய்திகள்

07-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

7th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 07.2021

பிலவ வருடம், ஆவணி 22, செவ்வாய்க்கிழமை,
வளர்பிறை, அமாவாசை திதி காலை 7:09 வரை,
அதன்பின் பிரதமை திதி, பூரம் நட்சத்திரம் மாலை 6:56 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நேர்மையான அணுகுமுறை காரணமாக பிரச்னையில் இருந்து மீளுவீர்கள்.
பரணி: தெய்வீக சிந்தனை மேலோங்குவதால் நிம்மதி கூடும்.
கார்த்திகை 1: தேவைகளை அடைவதற்கு அதிக பணம் செலவழிப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: செலவு அதிகமானாலும் மகிழ்ச்சி ஏற்படும்.
ரோகிணி: உங்களிடம் வாக்குவாதம் செய்பவர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள்.
மிருகசீரிடம் 1,2: பொதுமக்கள் தொடர்பின் மூலம் விரும்பிய ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனதின் மகிழ்ச்சி காரணமாக மன்னிக்கும் குணம் வரும்.
திருவாதிரை: குழந்தைகளுக்கு குடும்பச் சுமை கூடும். உபரி வருமானம் வரும்.
புனர்பூசம் 1,2,3: சக பணியாளரிடையே நல்ல நட்புணர்வு காணப்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: உறவினர் செயல் ஒன்றால் வீட்டில் உற்சாகம் பொங்கும்
பூசம்: அரசால் அனுகூலம் உண்டு. பெரியவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
ஆயில்யம்: மேலதிகாரிகள் உங்களைத் தட்டி கொடுத்து வேலை வாங்குவர்.

சிம்மம் :

மகம்: உங்கள் கருத்திற்கு இருந்து வந்த எதிர்க்கருத்துகள் மாறும்.
பூரம்: சிறப்பாக செயல்பட்டு வாழ்க்கைத்துணையின் பாராட்டை பெறுவீர்கள்.
உத்திரம் 1: திடீர் யோகம் கிட்டும் நாள். குடும்ப வருமானம் உயரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நீண்ட நாள் விருப்பம் ஒன்று திடீரென்று நிறைவேறும்.
அஸ்தம்: தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். கவலையை மறப்பீர்கள்.
சித்திரை 1,2: திட்டமிட்டுப் பணியாற்றுவதன் மூலம் தவறுகளை தவிர்ப்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகத் துவங்கும்.
சுவாதி: மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறும் சாதனைகளை செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: பிரியமானவர்களுடனான அன்பை வலுப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: சந்தோஷச் செய்தி வரும். மனம் சமநிலையில் இருக்கும்.
அனுஷம்: புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
கேட்டை: சிறிய வெற்றி ஒன்றின் மூலம் மனதில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு:

மூலம்: எதிர்பார்த்த தகவல் ஒன்று தாமதத்துக்குப் பிறகே வந்து சேரும்.
பூராடம்: எதிரிகள் யாரென்று அறிந்து அவர்களை வெல்வீர்கள்.
உத்திராடம் 1: மனதில் உற்சாகமான போக்கு நிலவும். செயலில் கவனம் தேவை.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குழந்தைகளின் செல்வாக்கு உயர்வதால் பெருமிதம் ஏற்படும்.
திருவோணம்: வருமானத்தின் பொருட்டு குறுக்கு வழியை நாட வேண்டாம்.
அவிட்டம் 1,2: பயணத்தின்போது பண இழப்பு ஏற்படாமல் கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: எந்த விஷயத்தையும் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்.
சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
பூரட்டாதி 1,2,3: கடமையை நிறைவேற்றுவதில் இருந்த தொய்வு அகலும்.

மீனம்:

பூரட்டாதி 4: நிதிநிலை நிம்மதி தரும். செயல்களில் அக்கறையை கூட்டுங்கள்.
உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
ரேவதி: வியாபாரிகள் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

7th September Today Raasi Palankal

Related posts

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை : அமைச்சர் நாமல் ராஜபக்ஷ..!

Tharshi

சாராயம் என நினைத்து சானிடைசர் குடித்த ஆட்டோ டிரைவர் பரிதாப பலி..!

Tharshi

என் உடல்நிலை பற்றி வெளியே சொல்ல பயம் : கதறியழுத சமந்தா..!

Tharshi

1 comment

Leave a Comment