குறும்செய்திகள்

09-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

9th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 09.2021

பிலவ வருடம், ஆவணி 24, வியாழக்கிழமை,
வளர்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 2:49 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திரம் மாலை 5:24 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : முகூர்த்த நாள், சாம உபாகர்மா.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தியானம், யோகா மூலம் அமைதி காண்பீர்கள். மனத்துணிவு கூடும்
பரணி: முதலீடுகள் அதிக லாபம் தரும். அன்பளிப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் விட்டு கொடுத்து போவது நல்லது.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நீண்டகாலம் நிலவிய கடன் தொகை குறைந்து நிம்மதி பெறுவீர்கள்.
ரோகிணி: சகோதர வகையில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: தியானம் மூலம் அமைதி காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேரும்
திருவாதிரை: சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டால் பிரச்னை இருக்காது.
புனர்பூசம் 1,2,3: பணியில் நுட்பமாகச் செயல்படுவதால் பாராட்டப்படுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: நெருங்கியவர்கள் மூலம் உதவி உண்டு. உங்களின் மதிப்பு கூடும்.
பூசம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பரபரப்பான நாள்.
ஆயில்யம்: உறவினர்கள் மதிக்கும்படியான செயல் ஒன்றைச் செய்வீர்கள்.

சிம்மம் :

மகம்: மற்றவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கி வாழ்த்துப் பெறுவீர்கள்.
பூரம்: பெற்றோர் நலத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். அமைதி கிடைக்கும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நீங்கள் மதிப்பவர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.
அஸ்தம்: நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
சித்திரை 1,2: குடும்பத்தினரைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: மனநிறைவான நாள். சாதகமான செய்தி ஒன்று வரும்.
சுவாதி: குழந்தைகளின் வளர்ச்சியும், சாதனையும் பெருமிதம் தரும்.
விசாகம் 1,2,3: உயரதிகாரிகளிடம் மரியாதை கூடும். நிம்மதி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: இளைஞர்களின் பொறுமையான செயல் நன்மையை தரும்.
அனுஷம்: குடும்பத்தினரின் வசதியை மேம்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: வேற்று மொழிக்காரர்களின் உதவி கிடைக்கும். விருப்பம் நிறைவேறும்.

தனுசு:

மூலம்: அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்பு கூடுதலாகும். மனநிறைவான நாள்.
பூராடம்: புதிய விஷயம் ஒன்றை கற்பீர்கள். இளைஞர்களுக்கு நன்மை உண்டு.
உத்திராடம் 1: நண்பர்கள், உறவினர்களால் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: புதிய வாகனம் தேர்ந்தெடுக்கையில் கவனம் தேவை.
திருவோணம்: வெறுத்துப் பிரிந்தவர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
அவிட்டம் 1,2: சோர்வு நீங்கும். புதிய முயற்சிகளைக் கைவிடாதீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: எந்த விஷயத்தையும் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்.
சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
பூரட்டாதி 1,2,3: கடமையை நிறைவேற்றுவதில் இருந்த தொய்வு அகலும்.

மீனம்:

பூரட்டாதி 4: கடன் விவகாரங்களில் மற்றவர்களுக்கு ஜாமீன் சொல்ல வேண்டாம்.
உத்திரட்டாதி: புதிய ரிஸ்க் எதையும் எடுக்காமல் செயல்படுவது நல்லது.
ரேவதி: செய்யும் செயல்களை ஈடுபாட்டுடன் செய்து பலன் அடைவீர்கள்.

9th September Today Raasi Palankal

Related posts

அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்..!

Tharshi

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் பூரண குணம்..!

Tharshi

Leave a Comment