குறும்செய்திகள்

623 பொருட்களின் இறக்குமதி குறித்து மத்திய வங்கி முக்கிய தீர்மானம்..!

623 Central Bank major resolution on imports of goods

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு வீத உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள், உதிரிப்பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், அதிகப்படியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி சந்தையின் உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

623 Central Bank major resolution on imports of goods

Related posts

முதியோர்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள் : இன்று சர்வதேச முதியோர் தினம்..!

Tharshi

Dell’s Return To Stock Market Leaves A Bitter Taste In Company Finance Future

Tharshi

14-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment