குறும்செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed in 1596 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேர் (அரசு மருத்துவமனை 18, தனியார் மருத்துவமனை – 3) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,534 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 16,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,60,195 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அந்தவகையில், அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்களின் விபரம் :-

கோவை – 224, சென்னை – 186, ஈரோடு – 130, செங்கல்பட்டு – 108, தஞ்சாவூர் – 92

Corona infection confirmed in 1596 people in Tamil Nadu today

Related posts

13க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் கிளீனர்கள் கொன்று புதைத்த பிரபல தாதா உள்பட 12 பேருக்கு தூக்குத் தண்டனை..!

Tharshi

06-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

28-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment