குறும்செய்திகள்

11-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

11th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 11.2021

பிலவ வருடம், ஆவணி 26, சனிக்கிழமை,
வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:27 வரை,
அதன்பின் சஷ்டிதிதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:44 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : பாரதியார் நினைவு நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் கவலை இருக்காது.
பரணி: தாமதித்த விஷயங்கள் தடையின்றி நடைபெறும் நாள்
கார்த்திகை 1: அலுவலகத்தில் பிறருடைய தலையீடின்றி இயங்க விரும்புவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நிதி விஷயங்கள் திருப்தி தரும். பெருமிதம் அதிகரிக்கும்.
ரோகிணி: மனக்குழப்பம் அகன்று நிம்மதி றெ நண்பர்கள் வழிகாட்டுவர்.
மிருகசீரிடம் 1,2: அலைபேசி வழியில் அனுகூலமான செய்தி கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் ஒன்று அகலும்.
திருவாதிரை: விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
புனர்பூசம் 1,2,3: திட்டம் ஒன்று நன்மை தரும். உறவினர் ஒத்துழைப்பர்.

கடகம்:

புனர்பூசம் 4: பணத்தேவை சற்று அதிகமானாலும் கவலை அளிக்காது
பூசம்: பிறரிடம் பக்குவமாகப் பேசி அனுசரித்து நன்மை பெறுவீர்கள்.
ஆயில்யம்: நண்பர்கள் நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.

சிம்மம் :

மகம்: தடைப்பட்ட செயல் தானாக நடைபெறும் நாள்.
பூரம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 1: தொலை துாரத்திலிருந்து அனுகூலச் செய்தி ஒன்று வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சி காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: பதற்றம், அவசரமின்றி யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.
சித்திரை 1,2: செலவு சற்று அதிகரிக்கக்கூடும். பரபரப்பு கூடும்.

துலாம்:

சித்திரை 3,4: இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று குழம்புவீர்கள்.
சுவாதி: முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமாக இருக்கும்.
விசாகம் 1,2,3: அருகில் உள்ளவர்களின் ஆதரவு முன்பைவிடக்கூடும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நினைத்தது நிறைவேறும் நாள். பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
அனுஷம்: நிகழ்காலத் தேவைகளில் ஒன்று நிறைவேறும்.
கேட்டை: தொழில் வளர்ச்சிக்கு எதிர்பாலினத்தினரின் ஒத்துழைப்பு உண்டு.

தனுசு:

மூலம்: சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்வதால் மனநிறைவு ஏற்படும்.
பூராடம்: சமீபத்தில் சந்தித்த ஒருவரின் செயலால் சந்தோஷம் கிட்டும்.
உத்திராடம் 1: திட்டம் ஒன்றின் பலன் எதிர்பார்த்தபடியே அமையும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வருங்கால கனவுகளை நனவாக்க புதுமுயற்சி எடுப்பீர்கள்.
திருவோணம்: விலகிச் சென்ற ஒருவரால் திடீர் நன்மை ஏற்படும்.
அவிட்டம் 1,2: உங்களின் புகழ் அதிகரிக்கும். பேச்சினால் நன்மை வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: விலகிய பணியிலிருந்து மீண்டும் அழைப்பு வரக்கூடும்.
சதயம்: மறதியால் செய்யத் தவறிய விஷயத்தை இன்று செய்து முடிப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வேண்டிய ஒருவரால் சமீபத்தில் வந்த பிரச்னை விலகும்.

மீனம்:

பூரட்டாதி 4: வாழ்வில் முன்னேறுவதற்கு இருந்த போட்டி அகலும்.
உத்திரட்டாதி: செலவு ஏற்பட்டாலும் அதன் மூலம் சந்தோஷம் கூடும்.
ரேவதி: பரபரபப்பாக செயலாற்ற வேண்டி வரும். கவனமாக இருங்கள்.

11th September Today Raasi Palankal

Related posts

யுவன் சங்கர் ராஜா கொடுத்த “வலிமை” பட அப்டேட்..!

Tharshi

Health star ratings Kellogg reveals the cereal

Tharshi

சிறுவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் வழிமுறைகள்..!

Tharshi

Leave a Comment