குறும்செய்திகள்

சீல் வைக்கப்பட்ட சீனி களஞ்சியசாலை அனுமதியின்றி திறப்பு : மூவர் கைது..!

Sealed sugar warehouse opening without permission

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் சீல் வைக்கப்பட்ட, கடவத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலை ஒன்று அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இடத்தில் மீண்டும் சீனி விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூவரை 530 மில்லியன் ரூபா பெறுமதியான சீனி தொகையுடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

பரகந்தெனிய – இம்புல்கொட, வத்தளை – எலகந்த, வவுனியா – நாவற்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைதாகியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sealed sugar warehouse opening without permission

Related posts

நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு அமுலில்..!

Tharshi

Scalable code without bloat: DCI, Use Cases, and You

Tharshi

01-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment