குறும்செய்திகள்

13-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

13th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 13.2021

பிலவ வருடம், ஆவணி 28, திங்கட்கிழமை,
வளர்பிறை, சப்தமி திதி மாலை 5:40 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 11:30 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: கடன் தீர்க்கும் வாய்ப்பு உண்டாகும். மனதில் அமைதி நிலவும்.
பரணி: குடும்பத்தில் நன்மை உறுதியாவதற்குப் பொறுமை தேவை.
கார்த்திகை 1: தேவையான உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கலாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறுவதில் சிறு தாமதம் இருக்கும்.
ரோகிணி: பணியில் இருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்களின் பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
திருவாதிரை: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
புனர்பூசம் 1,2,3: வாங்க வேண்டும் என்று ஏங்கிய ஒரு பொருள் கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: தொழில், பணியில் சிறிய வளர்ச்சி ஏற்படும் நாள்.
பூசம்: எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.
ஆயில்யம்: தாய்வழி உறவுகளுடன் அன்பாகப் பேச வாய்ப்பு வரும்.

சிம்மம் :

மகம்: நல்லவர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனம் நிறையும்.
பூரம்: சொத்து சம்பந்தமான பிரச்னையில் அதிக மாற்றம் இருக்காது.
உத்திரம் 1: உங்களை நம்பியோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வாழ்வில் முன்னேறப் புதிய முயற்சியைக் கையாளுவீர்கள்.
அஸ்தம்: பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை 1,2: இளைஞர்களுக்கு தேவையான உதவிகளும், ஆதரவும் கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: ஆதாயம் உண்டு. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.
சுவாதி: பணியிட சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்.
விசாகம் 1,2,3: குடும்ப சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும்.
அனுஷம்: எடுத்த பணி ஒன்று எளிதாக முடியும். செலவு கூடும்.
கேட்டை: புதிய வியாபார வழிவகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தனுசு:

மூலம்: நீங்கள் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை.
பூராடம்: பணியில் அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் 1: கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். திடீர் பயணம் ஏற்பாடாகும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: செயல்பாடுகளில் பொறுமையாக இருக்க வேண்டும்.
திருவோணம்: பதற்றமின்றிச் செயல்பட்டால் எந்தவித பிரச்னையும் இல்லை.
அவிட்டம் 1,2: சோம்பலும் நிதானப்போக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: புதிதாக அறிமுகமாகும் நபரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
சதயம்: எவரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். மனசஞ்சலம் ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: அலட்சியமாக இருந்தால் சங்கடங்களை சந்திக்கக்கூடும்.

மீனம்:

பூரட்டாதி 4: நேற்றைய பிரச்னை ஒன்று இன்று முடிவுக்கு வரும்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ரேவதி: அலுவலகப் பணியில் ஒரு சந்தோஷ அதிர்ச்சி கிடைக்கும்.

13th September Today Raasi Palankal

Related posts

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

Tharshi

26-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நுண்கலைக் கல்லூரி மாணவர்களுக்காக இடம்பெற்ற கற்பித்தல் செயற்பாடு..! (வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்ள முடியும்)

Tharshi

Leave a Comment