குறும்செய்திகள்

14-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

14th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 14.2021

பிலவ வருடம், ஆவணி 29, செவ்வாய்க்கிழமை,
வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 3:19 வரை,
அதன்பின் நவமி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:53 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பலநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும்.
பரணி: நண்பர் ஒருவருக்கு உதவுவீர்கள். தடை, தாமதங்கள் நீங்கும்.
கார்த்திகை 1: வாழ்க்கைத்துணைக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியால் நண்பரின் பிரச்னை தீரும்.
ரோகிணி: உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: பணவரவு சுமாராக இருக்கும். பதற்றம் குறையும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: புதிய வியாபாரத்தில் ஈடுபடும் முயற்சி தாமதமாகும்.
திருவாதிரை: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பயம் குறையும்.
புனர்பூசம் 1,2,3: எதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: குழப்பங்களும் மனபாரமும் தீரும். நிம்மதியான நாள்.
பூசம்: பணத்தேவைகள் எதிர்பார்த்தபடியே இருக்கும். உணவில் கவனம் தேவை.
ஆயில்யம்: புதிய வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் :

மகம்: பாதியில் நின்ற பணி ஒன்று தொடரும். நிம்மதி மீளும்.
பூரம்: நண்பரின் உதவியால் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.
உத்திரம் 1: புதிய தொழில், வியாபார வாய்ப்பு ஒன்று தேடி வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பதவி உயர்வு கிடைக்கும். பணியாளருக்கு பொறுப்புகள் கூடும்.
அஸ்தம்: தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.
சித்திரை 1,2: உங்களது திறமைகளை வெளிப்படுத்தி வளர்ச்சி காண்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வாழ்வு உயரும். சொந்த பந்தங்களால் நன்மை ஏற்படும்.
சுவாதி: வேறு நிறுவனத்துக்கு மாறும் முயற்சியில் சாதகமான சூழல் நிலவும்.
விசாகம் 1,2,3: தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: தொழில் தொடர்பான பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அனுஷம்: பலகால முயற்சி ஒன்று வெற்றி இலக்கை நோக்கி நகரும்.
கேட்டை: வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும். ரகசியம் பாதுகாப்பீர்கள்.

தனுசு:

மூலம்: படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்கு காத்திருப்போருக்கு நற்செய்தி வரும்.
பூராடம்: வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி உண்டு.
உத்திராடம் 1: கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
திருவோணம்: வெற்றி வாய்ப்பை நெருங்கினாலும் சிறு தாமதம் வரும்.
அவிட்டம் 1,2: உறவினர்கள், நண்பர்களின் செயல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சொத்து சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும்
சதயம்: கொடுக்கல், வாங்கல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: பற்றாக்குறை நீங்குவதற்கான முயற்சியில் தாமதம் ஏற்படும்.

மீனம்:

பூரட்டாதி 4: தாய், தந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும்
உத்திரட்டாதி: வெளியூர், வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஒன்று உருவாகும்.
ரேவதி: செய்திகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

14th September Today Raasi Palankal

Related posts

விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனைக்கு தீர்வு..!

Tharshi

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Tharshi

கோடை காலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழி முறைகள்..!

Tharshi

Leave a Comment