குறும்செய்திகள்

16-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

16th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 16.2021

பிலவ வருடம், ஆவணி 31, வியாழக்கிழமை,
வளர்பிறை, தசமி திதி காலை 10:57 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 7:01 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : குருவாயூரப்பன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உற்றவர்களின் செயல்பாடுகள் நிம்மதி தரும். பயம் நீங்கும்.
பரணி: எந்தச் செயலிலும், பேச்சிலும் மிகுந்த கவனம் தேவை.
கார்த்திகை 1: அமைதி கூடும். பெண்கள் புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பரபரப்பாக செயல்பட்டு பணியை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
ரோகிணி: கவலை நீங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: நேற்றைய பகை மாறி, சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வீடு மாற்றம் உறுதியாகலாம். சகோதர வழிப் பிரச்னை தீரும்.
திருவாதிரை: ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட தொல்லை முடிவிற்கு வரும்
புனர்பூசம் 1,2,3: தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள்மீது உயர்ந்தோர் வைத்த மதிப்பும், மரியாதையும் உயரும்.
பூசம்: புதிய நண்பர்கள் இணைவர். வீடு கட்டுவீர்கள். செலவு கூடும்.
ஆயில்யம்: பரபரப்பாகச் செயல்படுவீர்கள். தொலை துாரத்திலிருந்து நல்லசெய்தி வரும்.

சிம்மம் :

மகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணம் வரும்.
பூரம்: உங்கள் கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டி வரும்.
உத்திரம் 1: நல்லவர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் மனம் மாறுவர்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும்படியான செயல்களை செய்வீர்கள்.
அஸ்தம்: யாரைப் பற்றியும் குறைகூறி வம்பில் மாட்டாதீர்கள்.
சித்திரை 1,2: எப்போதோ செய்த தவறு பற்றி தாமதமாக சிரமம் ஏற்படும்.

துலாம்:

சித்திரை 3,4: விலகிச் சென்றவர் விரும்பி வந்து சேரும்போது இன்முகம் காட்டுங்கள்.
சுவாதி: குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்காக சுபச்செலவு ஏற்படலாம்.
விசாகம் 1,2,3: சகோதர, சகோதரியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4: .பணி சிறக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் விளையும்.
அனுஷம்: தேவைகள் பற்றிய கவலை தீரும். சிறு சிறு குழப்பம் ஏற்படும்.
கேட்டை: கடல் தாண்டி வரும் செய்தி சந்தோஷம் தருவதாக அமையும்.

தனுசு:

மூலம்: வியாபாரத்தில் வேலையாட்களின் முயற்சியால் நன்மை வரும்.
பூராடம்: பணியிடத்தில் உங்களை மற்றவர்கள் வியந்து பாராட்டுவர்.
உத்திராடம் 1: பிரச்னைகளுக்கு முனைப்புடன் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நல்ல நண்பர்களுக்காக செலவிடும் சூழல் உருவாகும்.
திருவோணம்: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. மகிழ்ச்சி கூடும்.
அவிட்டம் 1,2: மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: குதுாகலம் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகள் உண்டு.
சதயம்: காதலில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்,
பூரட்டாதி 1,2,3: உறுதியோடு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: வீட்டைப் புதுப்பிக்க எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி: புதிய பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு வரலாம்.
ரேவதி: முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும்.

16th September Today Raasi Palankal

Related posts

வல்லாரை கீரை பொரியல் எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi

Leave a Comment