குறும்செய்திகள்

17-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

17th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 17.2021

பிலவ வருடம், புரட்டாசி 1, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை, ஏகாதசிதிதி காலை 9:13 வரை,
அதன்பின் துவாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் அதிகாலை 5:09 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : திருவோணம், ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: முடிந்துவிடும் என நினைத்த விஷயத்தில் தடைகள் வரலாம்.
பரணி: முயற்சிகளால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பரபரப்பு கூடும்.
கார்த்திகை 1: போன் மூலம் எதிர்பாராத நல்ல செய்தி வரும். மனச்சோர்வு நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பல நாட்கள் விரும்பிய விஷயம் இன்று நடந்து மகிழ்வீர்கள்.
ரோகிணி: பெற்றோரின் உடல் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உடல் நலம் சீராகி உற்சாகம் ஏற்படுத்தும். சுகம் கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தவறாகப் பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
திருவாதிரை: வாழ்வில் முன்னேற நியாயமான புதிய வழியைக் கையாள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உழைப்பு கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: விரும்பிய விஷயம் கிடைக்கும். பணக்கவலை தீரும்.
பூசம்: மெயில்கள் மூலம் சந்தோஷ அதிர்ச்சி தரும் செய்தி வரும்.
ஆயில்யம்: வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

சிம்மம் :

மகம்: பணியிடத்தில் சாதனைகள் செய்து காட்டுவீர்கள். இளமை திரும்பும்.
பூரம்: வரவேண்டிய பாக்கித்தொகை வசூலாகும். வருமானம் திருப்தி தரும்.
உத்திரம் 1: மற்றவர்கள் சார்பில் நீங்கள் கொடுத்திருந்த வாக்கால் சிரமம் ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வம்பு பேசாதீர்கள். எந்தப் பெரிய முடிவும் எடுக்க வேண்டாம்.
அஸ்தம்: கவலைகள் சற்றுக் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சித்திரை 1,2: நட்பால் நல்ல விஷயம் நடைபெறும். நன்மைகள் ஏற்படும்.

துலாம்:

சித்திரை 3,4: வாக்குறுதியைக் காப்பாற்ற நண்பர்கள் ஒத்துழைப்பார்கள்.
சுவாதி: உடன் பிறந்தவர்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
விசாகம் 1,2,3: கட்டிடப்பணி நல்லவிதமாக நடைபெறும். உடல் நலம் சரியாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வருமானம் சீராகி உற்சாகப்படுத்தும். ஆன்மிக ஈடுபாடு வரும்.
அனுஷம்: அனுபவம் மிக்கவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர்.
கேட்டை: நண்பர்கள் ஆதரித்து உதவுவார்கள். சிறு தாமதங்கள் நேரும்.

தனுசு:

மூலம்: அரசு அதிகாரிகள் சில விஷயங்களை முடித்துக் கொடுப்பர்.
பூராடம்: வருங்காலத்திற்காக சிறிது சிறிதாகச் சேமிக்க முற்படுவீர்கள்.
உத்திராடம் 1: புதிய எலக்ட்ரானிக் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மனம் நிறையும்.
திருவோணம்: தந்தை உடல் நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
அவிட்டம் 1,2: புகழ் மிக்கவர்களின் புதிய ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பூமி யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
சதயம்: பணி சம்பந்தமாக மாற்றங்கள் பற்றி செய்தி வரும்.
பூரட்டாதி 1,2,3: அடகு வைத்த வீடு, நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.

மீனம்:

பூரட்டாதி 4: விரும்பிய விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி: புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள்.
ரேவதி: யாரையும் விரோதியாக நினைக்க வேண்டாம். சுறுசுறுப்பு மீளும்.

17th September Today Raasi Palankal

Related posts

கணவரை விட்டு பிரிந்த காரணத்தை பிக்பாஸிடம் போட்டுடைத்த ரச்சிதா..!

Tharshi

20-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

08-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment