குறும்செய்திகள்

18-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

18th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 18.2021

பிலவ வருடம், புரட்டாதி 2, சனிக்கிழமை,
வளர்பிறை, துவாதசி திதி காலை 7:45 வரை,
அதன்பின் திரயோதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் அதிகாலை 5:35 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : மகா பிரதோஷம், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பணியிடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சிரமம் இன்று அகலும்.
பரணி: உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும். வெற்றிகள் கூடும்.
கார்த்திகை 1: வீடுமாற்றம், இடமாற்றம் உண்டு. கடன் தொல்லை குறையும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பல நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
ரோகிணி: உங்கள் தவறால் பொது வாழ்வில் இருந்த புகழ் குறையலாம்.
மிருகசீரிடம் 1,2: வம்புகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிரிகளின் கை தாழும். வளம் காணும் நாள்.
திருவாதிரை: பொருளாதார முன்னேற்றம் முன்பைவிடச் சிறக்கும்.
புனர்பூசம் 1,2,3: பாதியில் நின்ற பணிகளை முனைந்து முடிப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வருமானம் திருப்தி தரும். உறவினர் தொல்லை தொடரும்.
பூசம்: தேவையான பொருட்களை வாங்க செலவுகள் ஏற்படும்.
ஆயில்யம்: வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

சிம்மம் :

மகம்: யோசித்துச் செயல்படவில்லை என்றால் தொல்லை ஏற்படும்.
பூரம் வம்புகளில் ஈடுபட வேண்டாம். அவசரத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திரம் 1: துாரத்து உறவினர்களின் உதவி கிடைக்கும். புகழ் அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பிறரிடம் கனிவாகப் பேசி எதையும் சாதிக்கப்பாருங்கள்.
அஸ்தம்: உங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டவர்கள் மாறுவர்.
சித்திரை 1,2: வாழ்வில் உயர்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பிரியமான சிலரைச் சந்திப்பீர்கள். பணவரவு சிறிது உண்டு.
சுவாதி: உறவினர்களின் செயல்கள் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
விசாகம் 1,2,3: அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. மனம் நிறையும்.

விருச்சிகம்:

விசாகம் 4: அதிகாரிகள் கருணையுடன் நடந்து கொள்வர். ஆதாயம் உண்டு.
அனுஷம்: புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்
கேட்டை: மனதிற்கு நிறைவு தரும் நிகழ்வுகள் நடைபெறும் நாள்.

தனுசு:

மூலம்: வேலை பற்றி செய்த முயற்சியில் தாமதம் ஏற்படக்கூடும்.
பூராடம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவு காரணமாக பிரச்னை ஒன்று அகலும்.
உத்திராடம் 1: எதிர்ப்புகள் மாறும். தொட்டது துலங்கும். வெற்றி உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எதிர்பார்த்த விஷயம் நடைபெற்று மகிழ்ச்சியை தரும்.
திருவோணம்: இன்று மேற்கொள்ளும் பயணங்களால் பெரிய நன்மைகள் இருக்காது.
அவிட்டம் 1,2: இன்று மாலை வரும் செய்தி சந்தோஷப்பட வைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும் நாள்.
சதயம்: திட்டமிட்ட பணிகளில் சிறு மாற்றம் செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: கடந்த சில நாட்களாக வாட்டி வந்த மனக்குழப்பம் அகலும்.

மீனம்:

பூரட்டாதி 4: தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்திரட்டாதி: தொழில் முன்னேற்றம் சற்றே அதிகரிக்கும் நாள்.
ரேவதி: அலைபேசி மூலம் பொன்னான செய்தி வரும். தயக்கம் தீரும்.

18th September Today Raasi Palankal

Related posts

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

Tharshi

30-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா..!

Tharshi

Leave a Comment