குறும்செய்திகள்

கடைசி நேர போட்டி ரத்து – பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : மைக்கேல் வான்..!

Michael Vaughan says Such a shame for Pakistan cricket

கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என, மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்புகின்றனர்.

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்..,

“கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்திருப்பது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம். பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். விரைவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீர்க்கப்பட்டு பாகிஸ்தானில் விரைவில் கிரிக்கெட் விளையாடப்படும்” என தெரிவித்துள்ளார்.

Michael Vaughan says Such a shame for Pakistan cricket

Related posts

பணம் கட்டினால் இதெல்லாம் கிடைக்கும் : ட்விட்டரின் புது சந்தாமுறை..!

Tharshi

ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களுக்கும் வரி : பந்துல குணவர்தன..!

Tharshi

அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் : 5 பேர் அதிரடி கைது..!

Tharshi

Leave a Comment