குறும்செய்திகள்

பொன்னியின் செல்வன்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

Ponniyin Selvan Movie Latest Update

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்க, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக இதன் படப்பிடிப்பு பொள்ளியில் நடைபெற்று வந்தது. இதன் படத்தில் நடித்த நடிகர்களும் சமீபத்தில் தங்களுடைய நடிப்பை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து வந்தனர்.

இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன், புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

Ponniyin Selvan Movie Latest Update

Related posts

06-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Xbox One to launch in China this month after all

Tharshi

14-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment