குறும்செய்திகள்

20-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

20th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 20.2021

பிலவ வருடம், புரட்டாசி 4, திங்கட்கிழமை,
தேய்பிறை, பவுர்ணமி திதி அதிகாலை 5:51 வரை,
அதன்பின் பிரதமை திதி, பூரட்டாதி நட்சத்திரம் அதிகாலை 5:17 வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : பவுர்ணமி, சத்யநாராயண பூஜை.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: முயற்சிகள் வெற்றியில் முடியும். முன்னேற்றம் உண்டு.
பரணி: எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி உண்டு.
கார்த்திகை 1: முன்னேற்றம் காண்பீர்கள். ஏங்கிய விஷயத்தை அடைவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணி ஒன்று நிறைவேறும். உற்சாகம் அடைவீர்கள்.
ரோகிணி: செல்வாக்கு அதிகம் பெறுவீர்கள். குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: கணவன் மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உறவினர்களிடம் ஏற்பட்ட மோதல்கள் அடியோடு மறையும்
திருவாதிரை: பேச்சு, செயலில் மிகுந்த கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: எதையும் தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
பூசம்: மற்றவர்களால் கைவிடப்பட்ட ஒரு விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.
ஆயில்யம்: அரசாங்கம் மூலம் நடக்க வேண்டியவை அனுகூலமாக முடியும்.

சிம்மம் :

மகம்: முயற்சியில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும். புதிய நட்புகள் வரும்.
பூரம்: அலுவலக நன்மைகளில் இருந்த தாமதம் முடிவுக்கு வரும்.
உத்திரம் 1: குழந்தைகளை நல்ல முறையில் வழி நடத்துவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் பாசம் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: வாகனத்தை சீர் செய்வீர்கள். பேச்சில் கவர்ச்சி கூடும்.

துலாம்:

சித்திரை 3,4: உங்களுக்கு பிரச்னை கொடுத்தவர்கள் விலகிச்செல்ல வாய்ப்புள்ளது.
சுவாதி: பல காலக் கோரிக்கைகள் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: கடின உழைப்பினால் வெற்றிகளை ஈட்டுவீா்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: சில நேரங்களில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட காண்பீர்கள்.
அனுஷம்: குடும்ப வருமானம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
கேட்டை: வேறுமொழி பேசும் எதிர்பாலினத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு:

மூலம்: அடுத்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
பூராடம்: உங்கள் உழைப்பால் மேலதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள்.
உத்திராடம் 1: நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
திருவோணம்: தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
அவிட்டம் 1,2: மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
சதயம்: எச்சரிக்கையுடன் இருப்பீா்கள். கலகலப்பான நாளாக அமையும்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் அமையும்.

மீனம்:

பூரட்டாதி 4: மேலதிகாரியின் உத்தரவை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: எடுத்த செயலில் வெற்றியடைய அதிகம் முயற்சி செய்வீர்கள்.
ரேவதி: மனதில் தர்ம சிந்தனை மேலோங்கும். நட்பு வட்டம் விரியும்.

20th September Today Raasi Palankal

Related posts

15-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு..!

Tharshi

06-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment