டெல்லியில் உள்ள ஓவைசி இல்லத்தை சேதப்படுத்தியதாக, இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள அசோகா சாலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசியின் அலுவலக இல்லம் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ஓவைசியின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள டெல்லி பொலிசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.