குறும்செய்திகள்

கொவிட் 3 வது மருந்தளவாக (DOSE) பைசர் வழங்க திட்டம்..!

Govt plans to provide 3rd dose Pfizer

கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவாக (DOSE) பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்காக 14 மில்லியன் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது எனவும், இந்த தடுப்பூசிகளுக்காக ஒரு தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான அனைத்து நிதியையும், உலக வங்கி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அளவில் செலுத்தும் எனவும் வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுப்பூசி மற்றும் தொற்று நோய் தொடர்பான விசேட குழுவினால் கடந்த மே மாதம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதமளவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Govt plans to provide 3rd dose Pfizer

Related posts

06-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

18-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான சில சித்த மருத்துவ முறைகள்..!

Tharshi

Leave a Comment