குறும்செய்திகள்

கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்காத வர்த்தகர்களுக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிப்பு..!

Increase in fines against traders who dnt sell goods at the controlled price

நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (22) நிறைவேற்றப்பட்டது. இந்த (திருத்த) சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.

அந்தவகையில், சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இச் சட்டமூலம் ஊடாக சில பொருட்களுக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிகபட்ச சில்லறை விலையொன்று குறிப்பிடப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்ட பின்னர் குறித்த கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்காத வர்த்தகர்களுக்காக எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, தனிப்பட்ட வணிகங்கள் மற்றும் நிறுவனங்களாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வணிகங்களுக்கும் தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோல், இது தொடர்பில் நீதிவான் ஒருவர் முன்னிலையில் நடாத்தப்படும் வழக்கு விசாரணைக்கு பின்னர், குற்றவாளிகளுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும்.

மேலும், அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் குறிப்பிடப்பட்டு சமீபத்தில் வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்ட போதும் குறித்த கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் நேற்று (21) உரையாற்றிய கூட்டுறவு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இந்த காரணமாகவே இந்த அபராதங்களை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

Increase in fines against traders who dnt sell goods at the controlled price

Related posts

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi

கொரோனா பொது நிவாரண நிதி : நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Tharshi

நாட்டில் மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment