குறும்செய்திகள்

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 19,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Russia has confirmed 19706 coronavirus infections in 24 hours

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 23.05 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வைரஸ் தொற்றுக்கு இதுவரை 47.26 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 73,33,557 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் அங்கு கொரோனா தொற்றுக்கு மேலும் 817 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 625 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,102 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 65,42,213 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 5,90,719 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Russia has confirmed 19706 coronavirus infections in 24 hours

Related posts

அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம்..!

Tharshi

18-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இங்கிலாந்து-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் : இன்று ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment