குறும்செய்திகள்

24-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

24th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 24.2021

பிலவ வருடம், புரட்டாசி 8, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, திரிதியை திதி காலை 8:52 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 10:02 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்பத்தில், அலுவலகத்தில் நிலைமை திருப்தியாக இருக்கும்.
பரணி: அக்கம்பக்கத்தினருக்கு சிறிய அளவில் உதவி செய்வீர்கள்.
கார்த்திகை 1: பணப்புழக்கம் சுமாராக இருக்கும். மனதில் திருப்தி கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாகி மகிழ்விக்கும்.
ரோகிணி: பெரிய மனிதர் ஒருவரின் சந்திப்பு நிகழும். நிம்மதி கூடும்.
மிருகசீரிடம் 1,2: பணியிட மாற்றம், பதவி உயர்வு கிடைப்பதில் பொறுமை தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உடன் பணிபுரிவோர் இடையே ஒற்றுமை பலப்படும்.
திருவாதிரை: குடும்பத்தில் ஒருவருக்கு திடீர் திருமணம் நிச்சயமாகும்.
புனர்பூசம் 1,2,3: காத்திருந்த விஷயத்துக்கு சில காலம் பொறுமை காக்க வேண்டும்.

கடகம்:

புனர்பூசம் 4: கடன் குறையும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
பூசம்: பணியிடத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: தொழில் செய்பவர்கள் கடுமையாக உழைத்து வெல்வீர்கள்.

சிம்மம் :

மகம்: சிக்கனம் காரணமாக நன்மை அடைவீர்கள். மனபலம் கூடும்.
பூரம்: சிரமம் தீர்வதற்கான வழி பிறப்பதால் மனத்தெளிவு உண்டாகும்.
உத்திரம் 1: சிலருக்கு ஆன்மிகப் பெரியோரின் சந்திப்பால் நிறைவு ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: செலவு அதிகரிக்கும். மனதில் கவலை ஏதும் இருக்காது.
அஸ்தம்: கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் சிரமப்படுத்த வேண்டாம்.
சித்திரை 1,2: அலுவலகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3,4: சிலர் புது வீடு கட்ட திட்டமிடுவீர்கள். பக்தி அதிகரிக்கும்.
சுவாதி: அரசாங்க அதிகாரிகள் மூலம் உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: பெரிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். பணிக்கவலைகள் குறையும்.
அனுஷம்: உங்களின் செல்வாக்கு கூடும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.
கேட்டை: குதுாகல நிகழ்வுகள் நடக்கும். பலவிஷயங்களை கவனிக்க வேண்டி வரும்.

தனுசு:

மூலம்: முன்பு இருந்த தொல்லைகள் நீங்கும். நல்ல பலன்கள் கிடைக்கும்.
பூராடம்: பணியாளர்கள் நினைத்த நன்மைகளை அடைவார்கள்
உத்திராடம் 1: உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வீண் பழி ஏற்படும்படியான செயல்களை தவிருங்கள்.
திருவோணம்: பணத்தை கவனமாகக் கையாளுங்கள். நேர்மை தவற வேண்டாம்.
அவிட்டம் 1,2: மாணவர்கள் உழைப்புக்கேற்ற நல்ல பலன் அடைவர்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பல நாட்களாக இருந்து வந்த மனக்குறை ஒன்று நீங்கும்.
சதயம்: உடல் ஆரோக்கியம் சீராகும். சுபச்செய்தி ஒன்று வரும்.
பூரட்டாதி 1,2,3: சிரமம் குறையும். புதிய வீட்டுக்கு மாற வாய்ப்புள்ளது.

மீனம்:

பூரட்டாதி 4: உங்களின் சிரமம் தீர்க்க நண்பர் ஒருவர் உதவுவார். பரபரப்பான நாள்.
உத்திரட்டாதி: காலையில் நல்ல செய்தி ஒன்று வரும். கலகலப்பு அதிகரிக்கும்.
ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். மன நிறைவு ஏற்படும். செல்வாக்கு கூடும்.

24th September Today Raasi Palankal

Related posts

உணவில் உப்பு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Tharshi

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment