குறும்செய்திகள்

சீனாவில் திவாலாகும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்..!

Evergrande situation can lead to rupee coming under pressure

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான “எவர்கிராண்ட்” பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹுய் கா யான் என்பவருக்கு சொந்தமானது எவர்கிராண்ட் நிறுவனம்.

1996 ஆம் ஆண்டில், தொழிலதிபர் ஹுய் கா யான் தெற்கு சீனாவின் குவாங்சோவில், ஹெங்க்டா குழுமத்தைத் தொடங்கினார். அது தான் தற்போது எவர்கிராண்ட் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.

இந்த நிறுவனம், மிக உயரமான கட்டடங்களை கட்டுவதில் புகழ் பெற்றது. சீனாவில் மட்டும் தற்போது ஆயிரத்து 300 கட்டடங்களை கட்ட ஒப்பந்தம் பெற்றுள்ளது.

சீன அரசு, கடந்த ஆண்டு, பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது.

அதனால் இந்த நிறுவனம் 22 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் திணறுகிறது

620 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மற்றும் வட்டியை இன்று செலுத்த வேண்டும் என்ற நிலையில், கடன் மற்றும் வட்டியை குறித்த நேரத்தில் செலுத்த இயலாது என அந்த நிறுவனத்தின் தலைவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இந்தியாவிலும் இதன் தாக்கம் காணப்பட்டது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர்.

வளரும் சந்தைகளை கொண்டுள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்க நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு கடன் அளித்தவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதன் தாக்கம் வேறு நாடுகளில் எதிரொலிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீன அரசு எவர்கிராண்ட்டை மீட்பதில் தலையிடலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்பதால், மீண்டும் ஒரு மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Evergrande situation can lead to rupee coming under pressure

Related posts

டெல்லியில் தீ விபத்து : 5 துணிக்கடைகள் எரிந்து நாசம்..!

Tharshi

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா..!

Tharshi

வைல்ட் கார்ட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் பிரபலம்..!

Tharshi

Leave a Comment