குறும்செய்திகள்

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்..!

Minister Namal Rajapaksa visits Batticaloa

அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காகவும், புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கையளிப்பதற்காகவும், தேசிய இளைஞர் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன் முதலாவது நிகழ்வாக வந்தாறுமூலையில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய வேலைத்திட்டமான ரூகம் கித்துள் குளங்களை இணைப்பது தொடர்பான வேலைத்திட்டத்தினையும் பார்வையிடுவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.

பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிற்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இன்று அமைச்சரின் வருகை தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

Minister Namal Rajapaksa visits Batticaloa

Related posts

Scalable code without bloat: DCI, Use Cases, and You

Tharshi

பாடலுக்கு கவர்ச்சி நடனம் : 1 கோடி சம்பளம் கேட்ட நடிகை..!

Tharshi

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு..!

Tharshi

Leave a Comment