2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு எந்த விதத்திலும் அடிப்படையற்றதாகும் என்று சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குறித்தவிடயம் பற்றி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவும் தற்போது விசாரணைகளை முடிவுறுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, உப்புல் தரங்க உள்ளிட்ட முன்னணி வீரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
மேலும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும உடனடி விசாரணைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.