குறும்செய்திகள்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்..!

Sri Lankan navy attacks Tamil Nadu fishermen

இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னார் அருகே கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்களை கற்களால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய மீனவர்கள் மேலும் கூறுகையில்..,

“இராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் வழக்கம்போல் பாக் ஜலசந்தி அருகே கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

அவர்கள் தமிழக மீனவர்களிடம் இப்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகில் ஏறி அவர்களை தாக்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக கரை திரும்ப முயன்றனர்.

அப்போது இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். 20க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை வெட்டினர்.

இதேபோல ரோந்து படகுகளை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். மேலும் கற்களை வீசி கண்ணாடியையும் உடைத்தனர்.

இதையடுத்து அங்கிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டது.”

இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

Sri Lankan navy attacks Tamil Nadu fishermen

Related posts

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல..!

Tharshi

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

Tharshi

Leave a Comment