குறும்செய்திகள்

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

US okays 3rd dose of Pfizer Covid19 Vaccine

அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது அங்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.US okays 3rd dose of Pfizer Covid19 Vaccine

அதனடிப்படையில், 65 வயதானவர்கள், நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் முதல் 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3-வது தடுப்பூசி போடலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

US okays 3rd dose of Pfizer Covid19 Vaccine

Related posts

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

Tharshi

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment