குறும்செய்திகள்

ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் வழங்கிய நூதன தண்டனை..!

Villagers gave new sentence escaped lovers

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தில் ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனையொன்றை வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார். அதுதொடர்பாக அவருடைய பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, அவர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபருடன் ஓடிப்போனது தெரிய வந்தது. அவர்கள் ஓடிப்போக 13 வயது சிறுமி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஆத்திரத்துடன் அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். ஓடிப்போன இருவரும் குஜராத் மாநிலத்துக்கு சென்று வசித்தனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.

அவர்களை பிடித்த கிராம மக்கள், ஓடிப்போனதற்கு தண்டனையாக, நடுரோட்டில் அவர்களது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை போட்டு, அவர்களை ஆட வைத்தனர். அவர்களும் வேறுவழியின்றி கழுத்தில் டயருடன் நடனம் ஆடினர். அவர்களுக்கு உதவிய 13 வயது சிறுமிக்கும் அதே தண்டனை அளிக்கப்பட்டது.

அப்போது, ஒரு நபர் அவர்களை பிரம்பால் அடித்தபடி இருந்தார். இந்த காட்சியை மற்றொருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தார் பொலிசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மீதி 2 பேரை தேடி வருகின்றனர்.

Villagers gave new sentence escaped lovers

Related posts

ஐரோப்பிய கால்பந்து போட்டி நாளை ஆரம்பம் : 24 நாடுகள் பங்கேற்பு..!

Tharshi

எலும்புகள் பலவீனமடைவதற்கான முக்கிய காரணிகள்..!

Tharshi

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தில் உலக சுகாதார நிறுவனம்..!

Tharshi

Leave a Comment