குறும்செய்திகள்

25-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

25th September Today Raasi Palankal

பிலவ வருடம், புரட்டாசி 9, சனிக்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 10:35 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, பரணி நட்சத்திரம் மதியம் 12:21 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: புதிய முயற்சிகளில் தாமதமான வெற்றி கிடைக்கும்.
பரணி: திட்டமிட்ட பயண வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.
கார்த்திகை 1: மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி: வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி உண்டு.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் உயர்கல்விக்கு முயல்வோருக்கு முன்னேற்றம் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: இளைஞர்களின் முயற்சியில் சிறிதளவு வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
புனர்பூசம் 1,2,3: மனதில் கற்பனை பயம் உண்டாகும். கவனம் தேவை.

கடகம்:

புனர்பூசம் 4: சுபநிகழ்ச்சிகள் பற்றிய முயற்சியில் தாமதமான பலன் ஏற்படும்.
பூசம்: காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான திருப்பம் உண்டு.
ஆயில்யம்: விடாமுயற்சியால் வெற்றி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் :

மகம்: கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் நன்மை உண்டு.
பூரம்: சேமிப்பு உயரும். பயம் நீங்கும். சந்தோஷ சம்பவம் உண்டு.
உத்திரம் 1: ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தி நலம் அடைவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு அலுவலக ரீதியில் திருப்தியான நிலை ஏற்படும்.
அஸ்தம்: ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது.
சித்திரை 1,2: அவப்பெயர் நேராமல் கவனமாக அடிஎடுத்து வையுங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வீண் பேச்சு, வம்பைத் தவிர்த்து மவுனமாக இருங்கள்.
சுவாதி: தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
விசாகம் 1,2,3: குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குழந்தைகளை கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது.
அனுஷம்: எடுத்த முயற்சியை சிரமப்பட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கேட்டை: இரண்டு நாளாக இருந்த மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி நிலவும்.

தனுசு:

மூலம்: சகஊழியர்களின் பொறாமை பற்றி கவலைப்பட வேண்டாம்.
பூராடம்: வியாபாரத்தில் வருமானம் ஏற்ற, இறக்கமாக இருக்கும்.
உத்திராடம் 1: ஒவ்வொரு செயலையும் கவனமாகச் செய்ய வேண்டிய நாள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தனிப்பட்ட விஷயங்களை யாரையும் நம்பி பகிர வேண்டாம்.
திருவோணம்: நிதானப்போக்கு, தடைகள் இருந்தாலும் வெற்றி உண்டு.
அவிட்டம் 1,2: சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சற்றுக் குறைவாகவே கிட்டும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பேச்சைக் குறைத்து செயலில் கவனம் கூட்ட வேண்டும்.
சதயம்: பொறுமை இழந்து யாரிடமும் கடுமையாகப் பேச வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: பெரிய மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.
உத்திரட்டாதி: போட்டிகளில் எதிர்பாராமல் வெற்றி பெற்று மகிழ்வீர்கள்.
ரேவதி: உடன்பிறந்தவர்கள் உங்களது வேலைகளைப் பகிர்ந்து உதவுவர்.

25th September Today Raasi Palankal

Related posts

மீண்டும் IPLஇல் கங்குலி..!

Tharshi

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார் நாமல் ராஜபக்க்ஷ..!

Tharshi

திடீர் சந்திப்பில் சம்பந்தனுக்கு மகிந்த வழங்கிய உறுதிமொழி..!

Tharshi

Leave a Comment