குறும்செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது..!

418 arrested for violating isolation curfew

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 48 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 77,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

418 arrested for violating isolation curfew

Related posts

18-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Tharshi

அஸ்ட்ரா ஜெனேகா – ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி..!

Tharshi

Leave a Comment