குறும்செய்திகள்

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு : பாதுகாப்பு தீவிரம்..!

Cinema screening after 30 years in Somalia

சோமாலியாவில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தியேட்டர் இயக்குனர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறது. இங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன. காரணம், தியேட்டர்கள் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கான களங்களாக ஆனதுதான்.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இதுகுறித்து தியேட்டர் இயக்குனர் அப்திகாதிர் அப்தி யூசுப் கருத்து தெரிவிக்கையில்..,

“இந்த இரவு சோமாலி மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவாக இருக்கும்.

பல வருட சவால்களுக்கு பிறகு இது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும்.” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த தியேட்டரில் 2 குறும்படங்களை 10 டாலர் (சுமார் ரூ.750) கொடுத்து மக்கள் பார்த்து ரசித்தனர்.

மேலும், இந்த தியேட்டர் சீன தலைவர் மாசேதுங்கின் பரிசாக, சீன என்ஜினீயர்களால் கட்டித்தரப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.

Cinema screening after 30 years in Somalia

Related posts

விஜய்யின் 66 வது படத்தில் 100 கோடி சம்பளம்..!

Tharshi

லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பா பட டீசர்..! (Video)

Tharshi

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!

Tharshi

Leave a Comment